Breaking News

ஆபத்துகளிலிருந்து காத்துக்கொள்ள தேசிய பாதுகாப்பு நிறுவனங்கள் தயாராக இருக்க வேண்டும்-உள்துறை செயலாளர் அறிவிப்பு !

காலநிலை மாற்றம், சைபர் தாக்குதல்கள் கட்டுக்கடங்காத புலம்பெயர்தல்கள்,ஃபாசிச தீவிரவாதிகளின் எழுச்சி- நாட்டிற்கு பெரும் ஆபத்து என்கிறார் உள்துறை அமைச்சர்.

கால நிலை மாற்றம், சைபர் தாக்குதல்கள் கட்டுக்கடங்காத புலம்பெயர்தல்கள், ஃபாசிச தீவிரவாதிகளின் எழுச்சி ஆகியவையால் ஏற்படும் ஆபத்துகளிலிருந்து தற்காத்துக்கொள்ள தேசிய பாதுகாப்பு நிறுவனங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என உள்துறை செயலாளர் Mike Pezzullo தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழல் அச்சுறுத்தல்கள் மற்றும் கொரோனா வைரஸ் தொற்று நோய் போன்றவற்றால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் தெரிவித்தார்.பாதுகாப்பு என்பது வெறும் வன்முறையை கையாள்வது மட்டுமல்ல, இதைப் போல் பேரிடரை சமாளிப்பதே பாதுகாப்பு என்று சுட்டிகாட்டி உள்ளார்.

மேலும் ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தும் 25 ஆபத்துகளில் கட்டுக்குள் இல்லாத புலபெயர்தல்களும் அடங்கும் என உள்துறை அமைச்சகத்தின் பதிவேடு குறிக்கிறது.இஸ்லாமிய பயங்கரவாத குழுக்கள் இன்னும் உலகத்தில் பயங்கரவாத அச்சுறுத்தலாகக் கருதப்பட்டாலும், அரசியல் ரீதியாக வன்முறையை ஊக்கவிக்கும் ஃபாசிச தீவிரவாதக் குழுக்களின் நடவடிக்கைகள் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக திரு Pezzulla தெரிவித்தார்.

மேலும் ஜனநாயக நிறுவனங்களை தகர்க்கும் முயற்சிகள், வெளிநாட்டு தலையீடு, அரசியல் போர், தவறான தகவல்கள் மூலம் நம் சமூக ஒற்றுமையை சிதைப்பது ,சமூக ஊடகங்களை வன்முறை ஆயுதமாக மாற்றுவது, பொது நிறுவனங்கள் மீதான நம்பிக்கை குறைத்தல் போன்ற கூடுதல் ஆபத்துகளும் கருத்தில் கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.

இந்த பதிவில் இணக்கமும் இல்லை, வெறுப்பும் இல்லை என அவர் வெளிப்படையாக கூறினார். அதிக ஆயுத பலமும் சரியல்ல குறைந்த அதிகார பலமும் சரியல்ல.Mega department 2017ல் தொடங்கியதிலிருந்து திரு Pezzullo உள்துறை செயலாளராக பணியாற்றியுள்ளார்.

பத்திரிக்கையாளர் Annika Smethurst-ன் இல்லம் மற்றும் ABC யின் சிட்னி அலுவலகத்திலும் சோதனை நடத்திய காவல் துறையினரை பாராட்டியதால் திரு Pezulla-வின் தலைமை விமர்சனத்திற்கு உள்ளானது.

ஆஸ்திரேலியர்களை பாதுகாப்பதற்கான ஒரு சர்வாதிகார அணுகுமுறைக்கு எதிராக அவர் எச்சரித்தார். உயிர் வாழ்வது மட்டும் முக்கியமல்ல பாதுகாப்புடன் வாழ்வதே முக்கியம். நாம் ஒன்றிணைந்து எப்படி உயிர் வாழ்கிறோம் என்பதே அவசியம் என அவர் ஆவேசமாக கூறினார்.