Breaking News

அடுத்த ஆண்டு மார்ச் முதல் கொரோனா தடுப்பூசிகளை அதி நவீன eskies மூலம் ஆஸ்திரேலியர்கள் பெறலாம்!

மத்திய அரசின் தடுப்பூசி திட்டம் சரியான பாதையில் சென்றுகொண்டிருக்கிறது என சுகாதாரத் துறை அமைச்சர் Greg Hunt தெரிவித்தார்.
இந்த தடுப்பூசியின் செயல்திறன் 90 சதவீதம் உள்ளதாக மருந்து நிறுவனமான Pfizer தெரிவித்துள்ளது. ஆனால் இதன் பாதுகாப்புத் திறனை உறுதிபடுத்த கூடுதல் தரவுகள் தேவை.

கொரொனாவிற்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்தியை உடல் எப்படி உருவாக்குகிறது என்பதை அறிய Pfizer தடுப்பூசி மரபணு தகவல்களை பயன்படுத்துகிறது. இதனால் இதை மைனஸ் 70 டிகிரியில் சேமிக்க வேண்டும்.

இந்த தடுப்பு மருந்தை குளிர்ந்த சூழ்நிலையில் கொண்டு செல்ல வேண்டும் என Therapeutic Goods நிர்வாகத் தலைவர் John Skerrit தெரிவித்தார்.

மேலும்,இந்த eski-கள் உலர்ந்த பனியை பயன்படுத்தும் உயர்ந்த ரகத்தை சேர்ந்தது. 14 நாட்கள் வரை நீடிக்கும்.இரண்டு முறை நிரப்பப்படலாம் என்று அவர் கூறினார்.

இரண்டு refills மின்சக்தி இல்லாமல் ஒன்றரை மாதங்களுக்கு செய்ய முடியும் என துணை பேராசிரியர் Skerrit தெரிவித்தார்.

Pfizer BioNtech மற்றும் Oxford AstraZeneca நிறுவனங்களுக்கு TGA ஒப்புதல் அளித்துள்ளது. பத்து மில்லியன் டோஸ் Pfizer தடுப்பூசிக்கு ஆஸ்திரேலியா ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும் 3.8 மில்லியன் இறக்குமதி செய்யப்பட உள்ளது.

தொடர்ந்து நான்காவது நாளாக சமூகப் பரவல் இல்லாமல் ஆஸ்திரேலியா இருக்க முடியும் என்று திரு Hunt தெரிவித்தார். நாடு முழுவதும் இந்த தடுப்பூசி திட்டம் அனைவரையும் சென்று அடையும் வரை உழைப்போம் என அவர் தெரிவித்தார்.கொரோனாவை கையாள்வதில் சிறந்து விளங்கும் நாடுகளில் ஆஸ்திரேலியா உள்ளது.

புதிய கொரோனா அலை அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பரவ ஆரம்பித்துள்ளது.1.2 மில்லியனுக்கும் அதிகமான மக்களை கொன்றுள்ளது.50 மில்லியன் மக்களை பாதித்துள்ளது.NSW நான்காவது நாளாக சமூக பரவல் இல்லாததால் விக்டோரியாவின் streak 12 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.