Breaking News

US காங்கிரஸ் $ 1.2 trillion கொரோனா நிவாரண மசோதா ஒரு அவமானம்- Donald Trump விமர்சனம் !

$ 900 Billion ($1.17 trillion AUD) bipartisan Covid Stimulus Package -ஐ அவமானம் என குறிப்பிட்டு , அதை ஏற்றுக்கொள்ளவும் Trump மறுத்துவிட்டார். ஆனால், கடந்த திங்களன்று இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதாவில் கையெழுத்து இட போவதில்லை என்று அவர் வெளிப்படையாக கூறவில்லை. $ 600($790AUD) -ஐ $2000 ஆக உயர்த்தியோ அல்லது ஒரு இணைக்கு $4000($5305 AUD) என மசோதாவில் திருத்தம் செய்ய வேண்டுமென கேட்டுகொண்டுள்ளார்.

மேலும், மசோதாவில் உள்ள தேவையற்ற விஷயங்களை நீக்கிவிட்டு, மசோதாவை அனுப்பும் படியும் கோரிக்கை விடுத்துள்ளார். இல்லையென்றால், Covid நிவாரண தொகுப்பினை வழங்க, தன் தலைமையில் புதிய நிர்வாகம் அமையும் என Trump குறிப்பிட்டுள்ளார். இந்த மசோதாவில், வெளிநாடுகள், Smithsonian நிறுவனம் மற்றும் மீன் வளர்ப்புக்காக ஒதுக்கப்பட்ட நிதிகளைப் பற்றியும் அவர் விமர்சித்துள்ளார்.

Covid -19 இறப்பு எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், Republican மற்றும் Democratic பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் தெரிவித்து உள்ளனர். மசோதாவை ஏற்றுக்கொள்வதில் தாமதம் ஏற்பட்டால், வேலை இழந்து தவிப்பவர்கள் மத்தியில் மோசமான விளைவுகளை உண்டாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறு வணிகங்கள் மற்றும் வெளியேறும் சூழலில் உள்ள குடும்பங்கள் இந்த தொகுப்பினால் பயன் அடையும். வரும் ஆண்டில் அரசுக்கு நிதி வருவாயை அதிகரிக்க உருவாக்கப்பட்ட ‘Omnibus Bill’ -ம், 5,600 பக்க ‘Coronabus Bill’ -இல் உள்ளடங்கும்.