Breaking News

இந்தியாவில் கொரோனா தொற்றால் தினசரி ஏற்படும் உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை நெருங்கிவருகிறது.

The daily death toll from corona infection in India is approaching 4,000.

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை இந்தியாவில் தொடர்ந்து கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவில் ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு அதிகரித்த படியே உள்ளது. கடந்த 24 நேரத்தில் நாடுமுழுவதும் 4 ,14,188 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. .இதனால் கொரோனா பாதிப்புக்குள்ளானோர் மொத்த எண்ணிக்கை 2 ,14,91,598 ஆகி உள்ளது.

நேற்று பதிவான பாதிப்புகளில் 71.81% மகாரஷ்டிரா, உத்தரபிரதேசம், தமிழகம், உட்பட 10 மாநிலங்களில் மட்டுமே கண்டறியபப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,915 பேர் உயிரிழந்துள்ளனர்.

The daily death toll from corona infection in India is approaching 4,000இதனால் இந்தியாவில் இதுவரை கொரோனாவால் 2,34,83 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மகாராஸ்டிராவில் மட்டும் 853 பேர் உயிரிழந்துள்ளனர்.
உத்தரபிரதேசத்தில் 350 பேரும், டெல்லியில் 335 பேர், கர்நாடகத்தில் 328 பேர், சத்தீஷ்காரில் 212 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா இறப்பு விகிதம் தொடர்ந்து 1.09 சதவீதமாக உள்ளது. தொற்று பாதிப்பு அதிகரிக்கும் அதே நேரத்தில், அதில் இருந்து மீள்வோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்தியாவில் மீட்பு விகிதம் 81.95%மாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவில் இருந்து 3,31,507 பேர் மீட்கப்பட்டிருக்கிறார்கள்.
கொரோனாவின் பிடியில் இருந்து 1,76,12.351 பேர் கொரோனாவில் இருந்துமீண்டு இருக்கிறார்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 18 லட்சத்து 26 ஆயிரத்து 490 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரையில் 29 கோடியே 86 லட்சத்து 1,699 மாதிரிகள் சோதிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.