Breaking News

Melbourne பந்தயக் குதிரை Anthony Van Dyck கருணைக்கொலை !

இந்த ஆண்டு Melbourne கோப்பை குதிரைப் பந்தயத்தில் ஓடும்போது காலில் காயம் ஏற்பட்டதால், பந்தயக்குதிரை Anthony Van Dyck கருணைக் கொலை செய்யப்பட்டது.

Jockey Hugh Bowman-ஆல் ஓட்டப்பட்ட Irish Stallion, பந்தயத்தின் இறுதி வளைவில் கால் எலும்பு முறிந்ததால் மனிதாபிமான அடிப்படையில் அதன் உயிரை பிரிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதாக Racing விக்டோரியாவின் தலைவர் Jamie Stier செவ்வாய் பிற்பகல் உறுதி செய்தார்.

குதிரைக்கு உடனடி கால்நடை மருத்துவம் அளிக்கப்பட்டது. ஆனால் காயத்தின் தன்மை காரணமாக காப்பாற்ற முடியவில்லை. இந்த சமயத்தில் Mr Bowman-க்கு எந்த காயமும் ஏற்படவில்லை.மேலும், குதிரையை இழந்து வருத்தப்படுவோர்க்கு ஆழ்ந்த இரங்கல்களையும் அவர் தெரிவித்து கொண்டார்.

கடந்த 2013 முதல் Melbourne கோப்பை பந்தயத்தில் இறந்த ஏழாவது குதிரை Anthony Van Dyck என்று விலங்கின ஆர்வலர்கள் தெரிவித்தனர்.குதிரையின் இறப்புக்கு சமூக வலைதளங்களில் கடுமையான கண்டனங்களை மக்கள் பதிவிட்டு வருகின்றன.

இது குதிரைபந்தயத்தின் மிருகத்தனமான எதார்தத்தை குறிக்கிறது.Anthony Van Dyck-ன் மரணம் ஒரு துன்பகரமான எதிர்பாராத விளைவு என்று NSW Greens Senator Faruqi தெரிவித்தார்.

குதிரை பந்தயம் கொடியது, மனிதாபிமானமற்றது. இதை உடனடியாக மூட வேண்டும்.கோவிட்-19 கட்டுப்பாடுகள் காரணமாக இந்த ஆண்டு பந்தயம் அமைதியாகவே நடைபெற்றது.

Twilight Payment பந்தயக்குதிரை பந்தயத்தை வென்றது. அதன் உரிமையாளர் Lloyd Williams-ற்கு தனது ஏழாவது Melbourne கோப்பையையும் பயிற்சியாளர் Joseph O’Brien-ற்கு தனது இரண்டாவது வெற்றியையும் பெற்றுள்ளார்கள்.