Breaking News

ஆஸ்திரேலியாவில் வருங்கால பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பேரிடர்களை சமாளிக்க தேசிய மீட்பு மற்றும் மறுவாழ்வு முகமையை தோற்றுவிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 

உலகம் முழுவதும் பருவநிலை மாற்றத்தால் கடுமையான இயற்கை பேரிடர்கள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது. இதனை எதிர்கொள்வது குறித்தும் பேரிடரில் இருந்து மக்களை பாதுகாப்பது குறித்தும், இந்த இயற்கை சிற்றங்களால் பாதிக்கப்படும் மக்களை மீட்டு, மறு வாழ்வு அமைத்து கொடுப்பது குறித்து ஆராய்ந்து அதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கையை அறிக்கையாக சமர்ப்பிக்க புஷ்பயர் ராயல் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் சில மாதங்களுக்கு முன்பு தன்னுடைய அறிக்கையை மத்திய அரசிடம்  தாக்கல் செய்தது.

இந்த அறிக்கையின் அடிப்படையில் மத்திய அரசு தேசிய மீட்பு மற்றும் மறுவாழ்வு முகமை என்ற அமைப்பை ஏற்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த அமைப்பு பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும் மக்களை மீட்டு மறுவாழ்வு கொடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை புஷ் அயர் ராயல் கமிஷன் பரிந்துரைத்ததபருவ

The federal government has decided to set up a National Recovery and Rehabilitation Agency in Australia to deal with disasters caused by future climate changeஏற்கெனவே செயல்படும் NDNQFRRA North Queensland Flood Response and Recovery Agency And the National Bushfire Recovery Agency என்ற இரு அமைப்புகளும் இந்த புதிய அமைப்பின் கீழ் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புஷ் பயர் முகமைக்கு ஒதுக்கப்பட்ட 2 பில்லியன் அமெரிக்க டாலர் இந்த புதிய முகமைக்கு மாற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராயம் கமிஷன் சுமார் 80 பரிந்துரைகளை அரசிடம் கொடுத்ததாகவும், அதிக 55 பரிந்துரைகளை செயல்படுத்த அரசு ஒப்புதல் தெரிவித்திருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதில் முக்கியமான பரிந்துரையான பருவநிலை மாற்றம் குறித்தும், அதன் ஆய்வறிக்கைகளை பல்வேறு அமைப்புகளுடன் பரிந்துரைக்க ஒப்புதல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வரும் காலங்களில் இயற்கை சீற்றங்கள் அதிகரிக்கும் என்றும் ,அதில் ஈடுபடும் மீட்பு பணியாளர்களை பயிற்றுவிக்க சுமார் 4.5மில்லியன் டாலர் ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த (National Recovery and Resilience Agency) தேசிய மீட்பு மற்றும் மறுவாழ்வு முகமைக்கு சுமார் 600 மில்லியன் டாலர் நிதி ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பேரிடர், சிரோஜா புயல் போன்ற பேரிடர்களை சமாளிக்கவும், மக்களை பாதுகாக்கவும் இந்த அமைப்பு உதவும் என்று பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3ehc799