Breaking News

Donut day:விக்டோரியாவில் கொரோனா பாதிப்பு இல்லை !

சில வாரங்களாகவே எந்த கொரோனா பாதிப்பும் ஏற்படாத நிலையில்,சமீபத்தில் ஒரு தொற்று ஏற்பட்டதாக தகவல் வெளிவந்தது.ஆனால் தற்போது பல ஆராய்ச்சிக்கு பின்னர் அது கொரோனா பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.அதனால் தற்போது மீண்டும் கொரோனா இல்லாத victoria -வாக மாறியுள்ளது.

state’s chief health officer Brett Sutton இந்த தொற்று இல்லாத நிலையை “Donut day” என்று தனது ட்விட்டர் பக்கத்தில் மகிழ்ச்சியாக தெரிவித்து உள்ளார்.

தற்போது மாநிலத்தில் 70 கொரோனா பாதிப்பு மட்டுமே இருப்பதனால் ,வியாபார ரீதியாக முன்னேற்றத்தை நோக்கி பயணிக்க தொடங்கிவிட்டனர்.பாதிப்பு இல்லாத கிறிஸ்துமஸ் கொண்டாட அனைவரும் காத்து கொண்டு இருக்கின்றனர்.

தொழிலாளர்கள் “அலுவலகங்களை மூட முடியாது” என்றும் பொது போக்குவரத்து மற்றும் லிஃப்ட் பயன்பாடுகள் போன்ற பல விஷயங்கள் உள்ளன, அவை அனைத்தும் பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்தார்.

கொரோனா பாதிப்புகள் குறைவாக இருந்தால், அலுவலக இடத்திலும் அந்த அபாயங்கள் மிகவும் குறைவாகிவிடும் என்று பேராசிரியர் சுட்டன் கூறினார்.

ஊரடங்கு காரணத்தால் வருமான ரீதியாக அனைவரும் பாதிக்கப்பட்டு இருப்பதனால்,அலுவலகங்களை எப்போது திறக்க அனுமதி கிடைக்கும் என்று பெரிய அளவில் எதிர்பார்ப்புகளும் இருந்து கொண்டே தான் இருந்தது.பல முதலாளிகள் ஏற்கனவே நீண்டகாலமாக அதற்கான ஏற்பாடுகளை செய்யத் தொடங்கி விட்டனர்.

வீட்டில் இருந்து வேலை செய்பவர்களுக்கு இந்த ஊரடங்கு வசதியாகவும் ,மகிழ்ச்சியாகவும் இருப்பதனால் , இது தொடர்ந்து நடப்பதை நியாயமாக முடியாது என்றும்அவர் சுட்டி காட்டினார்.

Melbourne-னில் வெள்ளிக்கிழமை வரை இரண்டு வாரங்களுக்கு தினசரி தொற்று சராசரி 2.4 ஆக உள்ளது.ஆதாரங்கள் எதுவும் இல்லாத
இரண்டு மர்ம வழக்குகளை அதிகாரிகள் தொடர்ந்து விசாரனை செய்து கொண்டு இருக்கின்றனர்.தற்போது நிலவரத்தின் படி
விக்டோரியாவின் COVID-19 இறப்பு எண்ணிக்கை 819 ஆகவும், தேசிய எண்ணிக்கை 907 ஆகவும் உள்ளது.