Breaking News

வெளிநாட்டில் சிக்கித்தவிக்கும் ஆஸ்திரேலியர்களுக்கு பிரதமரின் மகிழ்ச்சியான தகவல் !

வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் 30,000-க்கும் மேற்ப்பட்ட ஆஸ்திரேலியர்கள் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்கள் வரும் கிறிஸ்துமஸ்க்குள் நாடு திரும்புவார்கள் என்ற உறுதியை அளித்துள்ளார். United Kingdom -ல் மோசமாகி வரும் கொரோனா சூழ்நிலை மற்றும் பணிச்சூழல் மாற்றங்கள், நாடு திரும்ப வேண்டும் என்ற கோரிக்கையை அதிகரித்துள்ளது.

இந்தியாவிலிருந்து 10,000 நபர்களும், UK -லிருந்து 4500 நபர்களும், ஆஸ்திரேலியா திரும்ப விரும்புவதாக தெரிகிறது. நாடு திரும்பவதற்கான அணைத்து உரிமைகளும் இவர்களுக்கு உள்ளதாகவும், இவர்கள் விரைவில் நாட்டுக்கு அழைத்து வரப்படுவார்கள் எனவும் மற்றும் இவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் இவர்களுக்கு பிரதமர் தகவல் அனுப்பியுள்ளார்.

வரும் மார்ச் மாதத்திற்குள், நாடு முழுக்க கொரோனா தடுப்பு மருந்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர கவனம் செலுத்துவதாக பிரதமர் தெரிவித்துள்ளார் . Corona Virus தடுப்பு ஊசியினை முதலில் யாருக்கு செலுத்துவது என்பதைப்பற்றி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இக்கட்டான சூழ்நிலையில் பணியில் ஈடுபட்டவர்கள் இந்த வரிசையில் முன் நிற்பார்கள் என்றும் Mr.Morrison தெரிவித்தார். இந்த திட்டத்தின் விவரங்கள் முடிவு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சர்வதேச பயணிகள் ஆஸ்திரேலியாவுக்கு வருவதைப் பற்றிய கேள்விகளுக்கு அவர் மறுப்பு தெரிவித்தார். வரும் ஜூன் மாதத்திற்கு முன்பாக, பரவலான சர்வதேச பயணத்தை தொடங்குவது பற்றிய கேள்விகளுக்கு அவர் முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

தற்போது சர்வதேச எல்லைகளை திறந்து விடுவதை பற்றிய எந்த திட்டமும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார் . ஆனால் விதிவிலக்காக நியூஸிலாந்திற்கு மட்டும் எல்லைகள் திறக்கப்பட்டு, தினமும் 10,000 Kiwis நாட்டுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார். Pacific Islands பருவகால பணியாளர்கள் அவர்கள் பணி செய்யும் இடங்களில், தனிமைப்படுத்துதல் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தால் மட்டுமே, ஆஸ்திரேலியாவிற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

நாட்டின் எல்லைக்கட்டுப்பாட்டில் கவனமுடன் இருப்பதால் தான் இந்த காலகட்டத்தில் நாம் சிறப்பாக செயல்பட முடிகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டின் முதல் காலாண்டுக்கு பின்பு, சர்வதேச பயணங்கள் மீண்டும் தொடங்கும் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.