Breaking News

விபரீதமான US அதிபர் தேர்தல் விவாத நிகழ்ச்சி !

President Donald Trump மற்றும் முன்னாள் Vice President Joe Biden , இருவருக்கும் இடையே நடந்த 2020 ஆம் ஆண்டிற்கான முதல் தேர்தல் விவாதம் கலகத்தில் முடிந்தது.

90 நிமிடம் நடந்த இந்த விவாதம், அரசியல் விமர்சனத்திலிருந்து தனிப்பட்ட தாக்குதலுக்கு மாறியது. இவிவாதத்தை சமூக ஊடகங்களும் பொது மக்களும் கண்டித்துள்ளனர்.

விவாதத்தின் சாரம்சம்.

வெள்ளை ஆதிக்கத்தையும் போராளிகளையும்Donald Trump கண்டிக்கத் தயாரா? என்று நெறியாளர் Chris Wallace கேட்டதற்கு,
“கண்டிக்கத் தயார் ஆனால் பிரச்சனைகள் செய்வது இடதுசாரி சிந்தனையாளர்களே ஒழிய வலதுசாரிகள் இல்லை என்று Trump தெரிவித்தார்.
வலதுசாரியான PROUD BOYS GROUP-ன் தேசிய செயலாளர் ENRIQUE TARIO Trumpபின் இந்தக் கருத்தை பெரிதும் வரவேற்றுள்ளார்.

அடுத்து Trump கட்டிய $US750 ,கூட்டு வரி பற்றிய கேள்விக்கு பதிலளித்த Trump “நான் பல கோடி டாலர்கள் வருமான வரி செலுத்துகிறேன் அதன் விவரங்களை கூடிய விரைவில் தருவேன்” என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பேசிய Trump, நடக்கவிருக்கும் தேர்தலில் மக்களின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாகவும் ஆனால் தேர்தல் நேர்மையாக நடக்கப்படமாட்டது என்றும் தெரிவித்தார். ballot முறை தேர்தலில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் அதை மாற்ற வேண்டும் என தாம் பலமுறை வலியுறுத்தியதாகவும் தெரிவித்தார்.

பிறகு BIDEN மற்றும் ட்ரம்பிற்கு இடையேயான விவாதம் தனிப்பட்ட தாக்குதல்களாக மாறியது. சுப்ரீம் கோர்ட் பற்றிய BIDEN-ன் கருத்திற்கு காட்டமாக பதில் சொன்ன Trumpபைப்பார்த்து “SHUT UP” என்று Biden சொல்ல, பதிலுக்குTrump மேலும் , Bidenஇன் மகனின் தொழிலைப் பற்றி விமர்சனம் செய்ய விவாதம் வேறு திசையில் சென்றது.

இருவரும் மாறி மாறி தங்களது குடும்பங்களைப் பற்றி அவதூறாக பேச, இறுதியில் Biden வரலாற்றின் மிக மோசமான அதிபர் Trump என்று தெரிவித்தார்.

கொரோனா தொற்றுதல் பற்றி விவாதம் வரும்பொழுது திருBiden , Trump அரசு இந்தசூழ்நிலையை மிக மோசமாக கையாண்டது என்றும்,இந்த நோயின் தீவிரத்தை முன்பே அறிந்திருந்தும் சரியான திட்டம் இல்லாமல், தொலைநோக்கு பார்வை இல்லாமல் அஜாக்கிரதையாக கையாண்டதின் விளைவு இன்று பல அமெரிக்கர்களின் உயிர்களை பலியாக்கியுள்ளது என்றும் விளாசி தள்ளினார்.

இந்த நோய் தொற்று பற்றி கவலைப்படாமல் Trump, பங்கு சந்தைகளை பற்றி மட்டுமே கவனம் செலுத்தினார் என்று Biden குற்றம் சாட்டினார். Trump விரைந்து அறிவுப்பூர்வமாக செயல்படாவிட்டால், மேலும் உயிர்ப்பலிகள் ஏற்படும் என எச்சரித்து உள்ளார் Biden.