Breaking News

சிட்னியின் வடக்கு கடற்கரைகளில் கொரோனா பாதிப்பு 17 ஆக அதிகரிப்பு !

சிட்னியின் வடக்கு கடற்கரைகளில் கொரோனா பாதிப்பு 17 ஆக அதிகரித்து உள்ளதனால் ,மக்கள் அனைவரையும் வீட்டிலேயே இருக்கும் படி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

புதன்கிழமை மற்றும் வியாழக்கிழமைகளில் கண்டறியப்பட்ட 17 வழக்குகள் இப்பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வியாழக்கிழமை மாலை NSW Health உறுதிப்படுத்தியது.

இந்த பாதிப்பினால்,அடுத்த மூன்று நாட்களுக்கு, வடக்கு கடற்கரைகள் உள்ளூராட்சி பகுதியில் உள்ளவர்கள் முடிந்தவரை வீட்டிலேயே இருக்கவும், தேவையற்ற பயணத்தைத் தவிர்க்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

முக்கியமான விஷயத்தை தவிர கிளப்புகள், உணவகங்கள், தேவாலயங்கள் மற்றும் ஜிம்கள் உள்ளிட்ட அதிக ஆபத்துள்ள இடங்களைத் தவிர்க்கவும் கூறப்பட்டுள்ளது .

வியாழக்கிழமை காலை கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்ட நபர் ,60 வயதான Frenchs Forest-ஐ சேர்ந்தவராவார்.அவர் ஒரு குழுவில் வேலை செய்து வந்தவர் .அவர் சென்ற வாரத்தில் Avalon RSL Club, Penrith RSL Club and Kirribilli Club போன்ற இடங்களுக்கு சென்று பார்வையிட்டுள்ளார்.

மற்றும் ஒரு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர் ,Avalon-இல் உள்ள Pittwater Palms-இல் பணியாற்றியவர் .அவருக்கு வயது 50.
மேலும் ,வடக்கு கடற்கரைகளைச் சேர்ந்த பெண்ணின் பங்குதாரர் வியாழக்கிழமை பிற்பகலில் ஒரு தொற்று என உறுதி செய்யப்பட்டது.

சிட்னியின் வடக்கு கடற்கரைகளில் வசிக்கும் 60 வயதில் ஒரு பெண்ணும், 70 வயதில் ஒரு ஆணும் நெருங்கிய தொடர்பு கொண்டதனால் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது .இந்த காரணத்தினால் தான் அங்கு வசிக்கும் மக்களுக்கு கொரோனா அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்று NSW Health கூறியுள்ளது .

இந்த புது கொரோனா பாதிப்பினால் கிறிஸ்மஸ் பண்டிகையையொட்டி சமீபத்தில் திறக்கப்பட்ட குயின்ஸ்லாந்து மற்றும் WA எல்லைகள் NSW மக்களுக்கு மூடப்படுமா என்ற கவலையும் தற்போது எழுந்துள்ளது .

இந்த கட்டத்தில் புதிய எல்லை கட்டுப்பாடுகளை அரசாங்கம் பரிசீலிக்கவில்லை என்று Acting Queensland Premier Steven Miles ,அடுத்த 48 மணிநேரம் முக்கியமானதாக இருக்கும் என்று கூறினார்.northern beaches-இல் ஏற்பட்டுள்ள புதிய தொற்று காரணத்தை கண்டுபிடிக்க அவசரமாக மரபணு சோதனைகளும்,தொடர்பு தடமறிதல் முறையையும் NSW Health பயன்படுத்தி வருகின்றனர்.

சிட்னியின் தென்மேற்கில் இருந்து 45 வயதான வேன் ஓட்டுநர் ஒருவர் சர்வதேச விமானக் குழுவினரை தங்குமிடத்திற்கு மாற்றுவதற்காக பணியாற்றிய பிறகு, அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதனால், இந்த எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்டுள்ளது.ஆனால்,விமான நிலைய ஊழியருக்கும் ,வடக்கு கடற்கரை தொற்றுக்கும் தற்போது எந்த தொடர்பும் இல்லை என்பது தெரிய வந்துள்ளது .