Breaking News

கொரோனா பரவலினால் ஆஸ்திரேலியா பணியாளர்களிடம் ஏற்பட்ட அப்பட்டமான பாரபட்சங்கள் !

ஆஸ்திரேலியாவில் தொழிலாளர் சந்தையில் ஏற்பட்ட அப்பட்டமான பிளவுகளை கொரோனா சமுகபரவல் முன்னிலைப்படுத்தி காட்டுவதாக, ஆஸ்திரேலியா சிந்தனைவாதிகள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னர் ஏற்பட்ட பொருளாதார சரிவுகளைவிட, தற்போது வேலைவாய்ப்பு மிக வேகமாக குறைந்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

கொரோனா ஆரம்பகால முடக்கத்தில் ஏற்பட்ட சரிவிலிருந்து தற்போது மே மாதத்திற்கு பின் வேலைவாய்ப்புகள் அதிகரித்து வந்தாலும், வேலைவாய்ப்பு மற்றும் வருமானத்தில் ஏற்பட்ட தாக்கம் முற்றிலும் பாரபட்சமாக இருப்பதாக Mr. Nahum மற்றும் Dr. Stanford தெரிவித்துள்ளனர். வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் மீது பாரபட்சமான விளைவுகளை இந்த தொற்று பரவல் ஏற்படுத்தி உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர் . மிகக் குறைவான வருமானம் உள்ளவர்களே இந்த தாக்கத்தினால் மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பில் கொரோனா ஆரம்ப கட்டத்தில் ஏற்பட்ட சரிவு மற்றும் அதனைத் தொடர்ந்து வந்த எழுச்சி, ஆஸ்திரேலியாவின் தொழிலாளர் சந்தையில் பாதுகாப்பற்ற தற்காலிக பணிகளில் வளர்ந்து வரும் ஆதிக்கத்தை வெளிக்காட்டியுள்ளது. ஆஸ்திரேலியாவின் 2020 பொருளாதார மந்த நிலை சேவைத் துறைகளில் தொடங்கியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

விருந்தோம்பல், சில்லறை வணிகம், கலை, பொழுதுபோக்கு மற்றும் தனிநபர் சேவைகளில் உள்ள பணியாளர்கள், பொருளாதார நடைமுறைகளில் ஏற்பட்ட கட்டுப்பாட்டினால் ஏற்பட்ட பாதிப்பினை உடனடியாக உணர்ந்தவர்கள் ஆவர் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இதில் பெண்கள், இளம் தொழிலாளர்கள் மற்றும் பாதுகாப்பற்ற வேலையில் உள்ள பணியாளர்கள் அடங்குவார்கள் என்றும் Mr.Nahum மற்றும் Dr. Stanford தெரிவித்துள்ளனர்.

சராசரி வருமானம் உள்ளவர்கள் மற்றும் இந்த காலகட்டத்தில் நிரந்தர வேலை மற்றும் வருமானம் உள்ளவர்கள், தங்கள் வேலைகளை தங்கள் வீடுகளுக்கு மாற்ற முடிந்தது. நிரந்தர பணியாளர்களை விட தற்காலிக பணியாளர்கள் 8 மடங்கு விரைவாக தங்கள் வேலைகளை இழந்துள்ளதாகவும்,பகுதி நேர பணியாளர்கள் முழு நேர பணியாளர்களை விட 3 மடங்கு விரைவாக தங்கள் வேலைகளை எழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

ஒரு நாளைக்கு 2,200 புதிய தற்காலிக வேலை வாய்ப்புகள் என, கடந்த மே மாதம் முதல் நவம்பர் மாதம் வரை 4 லட்சம் தற்காலிக வேலைவாய்ப்புகள் உண்டானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய வரலாற்றிலேயே இதுதான் மிக அதிக அளவிலான தற்காலிக வேலை வாய்ப்பாகும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

2020 ஆம் ஆண்டை பற்றிய ஒரு கருத்துக் கணிப்பில், பலர் தங்கள் சோதனைகளையும், வேதனைகளையும் கருத்துகளாக தெரிவித்துள்ளனர். டிசம்பர் மாதத்தில் 1018 ஆஸ்திரேலியரிடம் மேற்கொண்ட இந்த கருத்துக்கணிப்பில், இந்த நூற்றாண்டில் நீங்கள் உங்களுடன் எடுத்துக்கொள்வது என்ன என்று கேட்ட கேள்விக்கு, பலர் தங்கள் வேலையில் செலவிட்ட குறைவான நேரமே என பதிலளித்தனர்.