Breaking News

காட்டுத் தீயை உண்டாக்கி Fraser தீவு அழியக் காரணமாக இருந்ததாக 4 பேர் கைது !

சட்டவிரோதமாக பற்ற வைக்கப்பட்ட Campfire-ரினால் குயின்ஸ்லாந்தில் உள்ள Fraser தீவின் பாதிப்பகுதிகள் காட்டுத்தீயில் அழிந்துள்ளது. இந்த சம்பவத்துக்கு 4 பேர் காரணமென குற்றம் சுமத்தப்பட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த 4 பேரில் ஒருவர் 17 வயது இளைஞர் ஆவார்.

இந்த 4 பேர் மீது அனுமதியின்றி Campfire பற்றவைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது . அக்டோபர் 14-ஆம் தேதி கிழக்குக் கடற்கரைப் பகுதியில் உள்ள முகாம் பகுதியில் சட்டவிரோதமாக Campfire பற்ற வைக்கப்பட்டதை பற்றி, Queensland Parks மற்றும் Wildlife Services அதிகாரிகளுக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருந்தது. அங்கு சென்ற அவர்கள் Campfire ஏற்றப்பட்ட இடம் மண்ணால் மூடப்பட்டு இருந்ததாகவும் அதற்கு அருகில் இருந்த பகுதியில் காட்டுத்தீ பரவி இருந்ததாகவும் தெரிவித்தனர். Campfire ஏற்றப்பட்ட பகுதிகளின் அருகே உள்ள காட்டுத்தாவரங்களில் தீப்பிடித்ததாகவும், அது முகாமின் வடமேற்குப் பகுதியில் காட்டுத்தீயாக மளமளவென பரவியதாகவும் குயின்ஸ்லாந்து போலீஸ் தெரிவித்துள்ளது.

இந்தக் காட்டுத்தீ , இத்தீவின் 87,000 Hectares நிலங்களில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. தீயணைப்பு வீரர்கள் 3 மில்லியன் லிட்டர் தண்ணீரைக் கொண்டும், தீயணைப்பான் Gel -ஐ கொண்டும் 9 வாரமாக இந்த தீயை அணைக்க போராடினர். இங்கு காணப்பட்ட தளர்வான மண், தீயணைக்க பயன்படுத்தப்பட்ட நீரை உருஞ்சியதால் தீயை அணைப்பதில் சிரமம் ஏற்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தீவின் மேற்குப்பகுதியில் உள்ள Kingfisher Bay Resort அருகில் எரிந்த காட்டுத்தீ அங்கு தங்கியிருந்த விருந்தினர்கள் மற்றும் ஊழியர்களை வெளியேறச் செய்தது. தீவின் கிழக்குப் பகுதியில் உள்ள Happy Valley மற்றும் Cathedrals பகுதிகளில், இது ஆபத்தை உண்டாக்குவதாக இருந்தது. ஆனால் அது அணைக்கப்பட்டது.

தீயை அணைக்கும் முயற்சியில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. Fraser தீவு Brisbane-ல் இருந்து 250 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. இங்கு 180,000 Hectares -க்கு அதிகமான நிலப்பகுதி உள்ளது. கைது செய்யப்பட்ட இந்த 4 பேரும் Hervey Bay Magistrates நீதிமன்றத்தில், வரும் ஜனவரி 21ஆம் தேதி ஆஜர் படுத்தப் படுவார்கள் என்று கூறப்படுகிறது. கைது செய்யப்பட்ட 17 வயது இளைஞர் மீது Youth Justice Legislation -ன் கீழ் வழக்கு தொடரப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.