Breaking News

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் அவர் மனைவிக்கு கொரோனா தொற்று ! சமூக ஊடகங்களில் இப்போ இவர் தான் ட்ரெண்ட் !

US அதிபர் ட்ரம்பின் உறவினருக்கு COVID-19 உள்ளதாக வந்த செய்தியை அடுத்து, அதிபர் ட்ரம்பிற்கும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

US அதிபர் தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே இருக்கும் சூழ்நிலையில்,அதிபர் தம்மை இரண்டு வாரம் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
கொரோனா தொற்று காலங்களில் 5G, Qanon மற்றும் vaccinations பற்றிய சதி வேலைகள் சமூக ஊடகங்களில் வைரலாகிவிட்டன.அதிபரின் கொரோனா தொற்றுக்கு 5G-யை குற்றம் சாட்டாதீர்கள் என Telstra தனது Titter பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

அதிபர் ட்ரம்பால் கொரோனா வைரஸ் தாக்கப்பட்டது.இந்த பேரிடரை சந்திக்கும் கொரோனா வைரசுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள என்று The Shovel தனது Twitter-ல் பதிவிட்டுள்ளது.

அதிபர் ட்ரம்ப் முகக்கவசங்கள பற்றி முன்பு பேசியதை இப்பொழுது பலர் கேலி செய்து சமூகவலைத்தளங்களில் பல செய்திகளை பதிவிட்டு வருகின்றனர்.முதலில் முகக்கவசம் அணியமாட்டேன் என்று ட்ரம்ப் கூறினார், பின்பு முகக்கவசம் அணிவது தேசப்பற்றை குறிக்கும் என்றார்.பிறகு Biden முகக்கவசத்தை அணிந்திருந்ததை தொடர்ந்து கேலி செய்தார் ட்ரம்ப்.

ட்ரம்ப முகக்கவசம் அணியாமல் பிடிவாதம் செய்ததால் அவருக்கு தொற்று வந்ததாக எனது மகன் கூறினான் என்று Eric Feigl Ding Twitter-ல் பதிவிட்டுள்ளார்.

இப்படி பலரும் ட்ரம்பை கேலி செய்த நிலையில் ட்ரம்பின் ஆதரவாளர்கள் அவரை தொடர்ந்து ஆதரிக்கின்றனர்.
கொரானாவால் அவதியுற்ற நிலையிலும் விவாத நிகழ்ச்சியில் Joe Biden-ஐ திணறடித்து தோற்கடித்தார் என்று De Anna Loraine தெரிவித்துள்ளார்.

இவரைத் தொடர்ந்து Mike Pence, Taiwan வெளியுறவு துறை அமைச்சகம், பாக்கிஸ்தான் அதிபர் இம்ரான் கான், இந்திய பிரதமர் நரேந்திர மோடி அதிபர் ட்ரம்பின் உடல் நிலை சீராக வேண்டும் என தங்களது அன்பை Twitter-ல் பதிவிட்டுள்ளனர்.இதனால் தற்போது #TrumpHasCovid என்ற ஹாஷ்டேக் உலக அளவில் ட்ரெண்டாகி கொண்டு இருக்கின்றது.