Breaking News

இந்தியாவில் உள்ள கேரள மாநிலத்தில் 18 பேருக்கு ஸிகா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் அண்மைக் காலமாக கொரோனா தாக்கம் சற்றே குறைந்த நிலையில், பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஸிகா வைரஸ் பாதிப்பு கேரளாவில் உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்தில் ஸிகா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது.

கொசுக்கள் மூலம் பரவக்கூடிய ஸிகா வைரஸ் கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் வேகமாக பரவி வருகிறது.

அப்பகுதியை சேர்ந்த கர்ப்பிணி பெண் உட்பட 15 பேருக்கு ஏற்கனவே இத்தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

இந்நிலையில் ஒன்றரை வயது குழந்தை உட்பட மேலும் மூவருக்கு ஸிகா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் கேரளாவில் ஸிகா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 18ஆக அதிகரித்துள்ளது.

Zika virus has been confirmed in 18 people in the Indian state of Keralaஅவர்கள் அனைவரும் திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டிருக்கிறார்கள். கொரோனாவுக்கு இடையே ஸிகா வைரஸ் அச்சுறுத்தி வரும் நிலையில் கேரளாவில் நோய் தடுப்பு பணிகளை அம்மாநில அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இதனிடையே கேரளா வந்துள்ள மத்திய அரசின் மருத்துவ குழுவினர் ஆய்வு பணிகளை தொடங்கியுள்ளனர்.

இது குறித்து கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், ஸிகா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு செயல் திட்டத்தை வகுத்துள்ளது என்று கூறியுள்ளார்.

கர்ப்பிணி பெண்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால், உடனடியாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்றும் கூறியுள்ளார்.

கேரளாவில் ஜிகா வைரஸ் உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் ஸிகா வைரஸ் எளிதில் நுழைய வாய்ப்புள்ளதாக அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு கண்காணிப்பை தீவிரப்படுத்த தொடங்கியுள்ளது.
கேரளாவில் இருந்து வருபவர்கள் கட்டாயம் இ பதிவு செய்ய வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Link Source: https://bit.ly/3i2YcEA