Breaking News

உங்களின் அலுவலகம் தகர்க்கப்படுகிறது, ஊடகத்தினருக்கு உயிர்பிழைக்க 10 நிமிடங்கள் கொடுத்த இஸ்ரேல் ராணுவம்.

Your office is being demolished, the Israeli army giving the media 10 minutes to survive.

இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படையினருக்கும் இடையே நடைபெற்று வரும் தாக்குதலில் 140 க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

கடந்த வாரம் காசா நகரத்தில் இயங்கி வந்த அல்ஜசீரா அலுவலகம் தகர்க்கப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த தாக்குதல் தருணங்களை மிரட்சியுடன் விவரிக்கின்றனர் , பத்திரிக்கையாளர்கள்.

அந்த கட்டிடத்தின் இரண்டாம் தளத்தில் உறங்கிக்கொண்டிருந்த என்னை என்னுடன் பணிப்புரிபவர் திடீரென எழுப்பினார்.

அவர் எழுப்பிய வேகம் என்னை குழம்பமடையச் செய்தது. ஆனால் 2006 ஆம் ஆண்டில் இருந்து அசோசியேட்டட் பிரஸ் அலுவலகமாக செயல்பட்டு வருகிறது.

அவர் வெளியேறுங்கள், வெளியேறுங்கள் என்று கூச்சலிடவே சூழ்நிலையை உணர்ந்து நானும் ஆயத்தமானேன்.

Your office is being demolished, the Israeli army giving the media 10 minutes to surviveகைகளில் கிடைத்த என்னுடைய லேப்டாப், என்னுடைய மகள் எனக்கு முதன் முதலில் வாங்கி கொடுத்த ஒரு காப்பி கோப்பை, என் குடும்பத்தினரின் புகைப்படங்கள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு ஹெல்மெட் அணிந்து கொண்டு வெளியேற தொடங்கினேன். அப்போது பலர் ஏற்கனவே வெளியேறிவிட்டதை கவனித்தேன்.

நாங்கள் வெளியே வந்து நின்ற சில நிமிடங்களில் அந்த அலுவலகத்தின் மீது அடுக்கடுக்கான ராக்கெட்டுகள் வீசப்பட்டு அக்கட்டிடம் தகர்க்கப்பட்டது.

ஒரு சில நிமிடங்களில் எங்களின் வாழ்கை பயணத்தில் இணைந்திருந்த கட்டிடம் தூசி படலத்துக்கிடையே ஒரு கான்கிரீட் மேடாய் கிடந்தது.

இதே போல் வேறொரு தளத்தில் இயங்கி வந்த அல்ஜசீரா ஊழியர்களில் ஒருவராகிய நான், கிடைத்த எச்சரிக்கையை தொடர்ந்து 11 மாடிகள் கீழ் இறங்கி வந்தேன். கீழ் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த கார்களில் என்னுடைய கார் மட்டுமே தனியாக நிற்பதை கண்டு அனைவரும் வெளியேறிவிட்டதை உணர்ந்தேன்.

சுதாரித்துக்கொண்டு உடனடியாக காரை இயக்கி அங்கிருந்து வெளியேறிய போது சற்று தள்ளி என்னுடன் பணிபுரியும் நண்பர்கள் கூட்டமாக நிற்பதை கவனித்தேன்.

அங்கு அவர்களுடன் நிற்கும் போது, எங்கள் அலுவலகம் இயங்கி வந்த கட்டடத்தின் உரிமையாளர் யாரிடமோ 10 நிமிடங்கள் கூடுதலாக கொடுங்கள் என்று மன்றாடிக்கொண்டிருந்தார்.

Your office is being demolished, the Israeli army giving the media 10 minutes to survive,அப்போது தான் புரிந்தது, எதிர் முனையில் பேசிக்கொண்டிருந்தவர் இஸ்ரேல் ராணுவத்தினர் என்றும் இந்த கட்டடத்தை தகர்க்க முடிவெடுத்துவிட்டதால் உரிமையாளரை தொடர்புக்கொண்டு அனைவரும் வெளியேற்ற வேண்டும் என்றும் கூறியுள்ளனர். ஆனால் இன்னும் பத்து நிமிடங்கள் கொடுத்தால் அந்த கட்டடத்தில் உள்ள முக்கிய உடமைகளை எடுக்க முடியும் என்று அவர் கெஞ்சிக்கொண்டிருந்தார். ஆனால் அதற்கு செவிசாய்க்காத அந்த இஸ்ரேல் அதிகாரி, அனைவரும் வெளியேறிவிட்டார்களா என்பதை உறுதி செய்தவுடன் தன்னுடைய தொடர்பை துண்டித்துவிட்டார்.

சில நிமிடங்களில் அந்த மிகப்பெரிய கட்டடம் ஒரு சீட்டுக்கட்டு சரிவதை போல சரிந்தது.

என்னுடைய அறையின் சாவி என் பையில் இருந்தது. ஆனால் அந்த அறையோ கட்டடமோ அங்கு இல்லை. நூழிலையில் உயிர்தப்பினோம். தற்போது உயிருடன் இருப்பதை நினைத்து ஆசுவாசப்படுத்திக்கொள்ள முடியவில்லை. ஏனென்றால் காசா பாதுகாப்பாக இல்லை.

Link Source: https://ab.co/3fptgNu