Breaking News

ஆஸ்திரேலியாவின் சிட்னியில் செவிலியர் இடம் தவறாக நடந்து கொண்ட இளைஞர் : கொரோனா விதிமுறைகளை மீறியதாகவும் கைது செய்து சிறையில் அடைத்த போலீசார்

Young man abuses nurse in Sydney, Australia. Police arrest and imprison Corona for violating rules

சிட்னியின் வடமேற்கு பகுதியில் உள்ள Dundas கொரோனா பரிசோதனை மையத்தில் இளைஞர் ஒருவர் அங்கிருந்த செவிலியரிடம் தவறாக நடந்து கொண்டதாக கைது செய்யப்பட்டுள்ளார். செவிலியர் இடம் அத்துமீறி நடந்து கொண்டதாகவும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாக இளைஞர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தான் அணிந்திருந்த போக்கை கைவிட்டுவிட்டு செவிலியரின் தலையில் இடித்து விட்டுச் சென்றதாகவும் கைது செய்யப்பட்டுள்ள இளைஞர் மீதான புகாராகும்.

31 வயதான அந்த இளைஞர் செவிலியர்கள் பரிசோதனை செய்வதை தன்னுடைய செல்போனில் படம் எடுத்து கொண்டு இருந்ததாகவும், திடீரென இது போன்ற செயலில் ஈடுபட்டதால் செவிலியர்கள் அதிர்ச்சிக்கு ஆளானதாகவும் கூறப்படுகிறது.

அதே போன்று Dundas வைரஸ் பரிசோதனை மையத்தில் திடீரென பெண் முன் களப்பணியாளர் ஒருவரிடம் அதே இளைஞர் தவறான முறையில் நடந்து கொள்ள முயற்சி செய்ததாக புகார் எழுந்தது.

ஆஸ்திரேலியாவில் கொரொனா தொற்று இன்னும் கட்டுக்குள் வராத நிலையில் பெரும்பாலான முன்கள பணியாளர்களுக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும், எல்லோரும் பரிசோதனை எண்ணிக்கையை அதிகரிக்கும் விதத்தில் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக செவிலியர்கள் கூறுகின்றனர்.

Link Source: https://ab.co/2VR79ZX