Breaking News

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தேசிய பெண்கள் பாதுகாப்பு மாநாடு சாதித்தது என்ன என்பது குறித்து பல்வேறு துறை சார்ந்த பெண்கள் தெரிவித்த கருத்துகளை பார்க்கலாம்.

You can see the comments made by women from various fields of what the National Women's Security Conference in Australia has achieved.

ஆஸ்திரேலிய தேசிய பெண்கள் பாதுகாப்பு மாநாடு காணொலி வாயிலாக நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற கானொளி வாயிலாக நடைபெற்ற இந்த மாநாட்டை ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தொடக்க உரையாற்றி தொடங்கி வைத்தார்.

அவரது உரையில், ஆஸ்திரேலியாவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க தவறிவிட்டதாக குறிப்பிட்டார். ஆஸ்திரேலியாவில் உள்ள பெண்கள் பாதுகாப்பற்ற சூழ் நிலையை உணருவதாகவும், இதற்கு மன்னிப்பு கோருவது மட்டுமே தீர்வாகாது என்று தெரிவித்தார்.

You can see the comments made by women from various fields of what the National Women's Security Conference in Australia has achieved.,.பெண் உரிமை ஆர்வலரும், வழக்கறிஞருமான Saxon Mullins தெரிவிக்கையில், தொற்று பரவலின் காரணமாக காணொளி வாயிலாக நடைபெற்ற இந்த மாநாட்டை நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கானவர்கள் பார்க்க முடிந்தாலும், அதில் ஒரு சிலருக்கு மட்டுமே கருத்து தெரிவிக்கவோ அல்லது கேள்வி எழுப்பும் வாய்ப்பு இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய பூர்வக்குடி பெண்களின் உரிமை குறித்து விவாதிக்க வேண்டியுள்ளதாக முல்லின் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா காவல்துறை ஆணையர் Reece Kershaw பேசிய போது தற்காலிக விசா காலத்தில் ஆஸ்திரேலியாவில் தங்கியுள்ள பெண்கள் குடும்ப வன்முறையில் பாதிக்கப்படும் போது சந்திக்கும் சவால்களை தீர்க்க வழிமுறைகளை காண வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த மாநாடு காணொளி வாயிலாக நடைபெற்றதால் , பெண்கள் சந்திக்கும் சவால்களையும், அவர்களின் நிலை குறித்து மக்களுக்கும் அரசுக்கும் வெளிப்படையாக தெரியப்படுத்த ஒரு வாய்ப்பாக அமைந்ததாக குடும்ப வன்முறைக்கு எதிராக குரலெழுப்பும் Torres Strait குறிப்பிட்டுள்ளார்.

You can see the comments made by women from various fields of what the National Women's Security Conference in Australia has achievedஆஸ்திரேலிய பெண்கள் பாதுகாப்பு துறை அமைச்சர் Anne Ruston பேசிய போது பூர்வக்குடி பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய தேசிய அளவில் கொள்கை வகுக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். Patty Kinnersly, அவர் வாட்ச் அமைப்பின் முதன்மை செயல் அதிகாரி தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில், அரசு உறுதி மொழிகொடுத்ததும், பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தீவிரமாக பேசுவதும் நம்பிக்கையளிப்பதாக இருந்தாலும், அதை தடுக்கவும், பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், குழந்தைகளுக்கு மறுவாழ்வு அளிக்க தேவையான நிதி ஆதாரங்களையும், சட்ட வாய்ப்புகளையும் தெளிவு படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.

பல்துறை நிபுணர் குழுவில் இடம் பெற்றிருந்த Patty Kinnersly, இந்த ஆலோசனை 10 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெறவில்லை என்றும், தற்போது நடைபெற்றுள்ளது சற்று மன நிறைவை தருவதாகவும் தெரிவித்துள்ளார்.

கலந்தாலோசனை செய்வது மூலம் உரிய திட்டங்களை வகுப்பதால், வரும் ஆண்டுகளில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் முன்னேற்றத்தை காண முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Link Source: https://bit.ly/3yRpCUb