Breaking News

உலகின் விலை உயர்ந்த சிப்ஸ் தயாரித்த உணவகம் : அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த Serendipity உணவகம் கின்னஸ் சாதனை

World's Most Expensive Chips Restaurant. Guinness World Record for New York-based Serendipity Restaurant.

நியூயார்க்கைச் சேர்ந்த உணவகம் ஒன்று புதுவிதமான கின்னஸ் சாதனையை படைத்துள்ளது. நியூயார்க்கின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள Serendipity உணவகம் மூன்று விதமான உலகின் விலை உயர்ந்த சிப்ஸ் வகைகளை தயாரித்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

World's Most Expensive Chips Restaurant. Guinness World Record for New York-based Serendipity Restaurantஇதற்கு முன்னதாக உலகின் விலை உயர்ந்த பர்கர் மற்றும் ஐஸ்கிரீம் ஆகியவற்றை தயாரித்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள இந்த உணவகம் தற்போது விலை உயர்ந்த ஃப்ரை வகையை தயாரித்து சாதனை படைத்துள்ளது. 200 அமெரிக்க டாலர் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள சிப்ஸ் வகை, உருளைக்கிழங்கை விலை உயர்ந்த வெள்ளை மது வகையான Champagne -ல் சமைத்து Edible Gold மூலமாக பொரித்து, Truffle சால்ட் மூலம் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

அரிதாக கிடைக்கும் காளான் வகைகளை கொண்டு தயாரிக்கப்பட்ட சாஸ், விலை உயர்ந்த ஃப்ரை வகையோடு பரிமாறப்படுகிறது. Truffle வகை உணவுகள் இந்த உணவகத்தை பொறுத்தவரைக்கும் முக்கிய அங்கமாக திகழ்வதாகவும், அதன் மூலம் பல்வேறு வாடிக்கையாளர்கள் இந்த உணவகத்தை தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.

World's Most Expensive Chips Restaurant. Guinness World Record for New York-based Serendipity Restaurant,.கொரோனா பெருந் தொற்று காலத்தில் உணவகங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், தற்போது இதுபோன்ற கின்னஸ் சாதனை முயற்சிகள் மக்களை உணவகத்தை தேடி வர வைப்பதற்கான முயற்சியாக இருக்கிறது என்று சமையல் கலை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தாங்கள் மேற்கொண்ட முயற்சிகள் பலன் அளித்திருப்பதாகவும், இதுவரை 8 லிருந்து 10 வாரங்களுக்கு ஆர்டர்கள் காத்திருப்பில் இருப்பதாகவும் உணவக உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3zKpYwP