Breaking News

ஒலிம்பிக் போட்டிக்கான நீச்சல் பயிற்சியில் உலக சாதனை : முந்தைய சாதனையை முறியடித்த குயின்ஸ்லாந்து நீச்சல் வீராங்கனை Kaylee McKeown

டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்கான பல்வேறு விளையாட்டுக்கான பயிற்சிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் நீச்சல் போட்டிக்கான பயிற்சிகளில் வீரர்-வீராங்கனைகள் ஈடுபட்டுள்ளனர்.

World record in swimming training for the Olympics,Queensland swimmer Kaylee McKeown breaks previous record,இதில் பின்னோக்கிப் பாயும் நீச்சலில் 100 மீட்டர் தூரத்திற்கான இலக்கை நோக்கிய போட்டியில் நீச்சல் வீராங்கனை Kaylee McKeown இதற்கு முந்தைய சாதனையை விட கூடுதலாக 0.12 வினாடிகளில் நீந்தி உலக சாதனைய நிகழ்த்தி உள்ளார். அமெரிக்க நீச்சல் வீரர் Regan Smith இதற்கு முன்னர் இந்த சாதனையை நிகழ்த்திய நீச்சல் வீரர் ஆவார்.

இந்நிலையில் உலக சாதனை நிகழ்த்தியுள்ள நீச்சல் வீராங்கனை Kaylee McKeown-ன் தந்தை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று சாதனை படைக்க வேண்டும், வெற்றி பெற என்று அதிகம் விரும்பிய தந்தை தன்னுடன் இல்லாதது பெரும் வருத்தமான ஒன்று Kaylee McKeown கூறியுள்ளார்.

World record in swimming training for the Olympics,Queensland swimmer Kaylee McKeown breaks previous record.இதேபோன்று உலகச் சாம்பியன் பட்டம் வென்ற நீச்சல் வீராங்கனை Ariarne Titmus ஃப்ரீஸ்டைல் சுற்றில் 400 மீட்டர் தூரத்தை குறிப்பிட்ட நேரத்தை விட முன்னதாக நீந்தி சாதனை படைத்துள்ளார். இதற்கு முந்தைய சாதனைகளை முறியடித்து புதிய உலக சாதனை படைத்திருப்பது ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்கான புதிய உத்வேகத்தை தந்திருப்பதாக நீச்சல் வீராங்கனைகள் இருவரும் தெரிவித்துள்ளனர்.

Link Source: https://ab.co/3iGleDc