கந்த ஜனவரி 21-ம் தேதி ஏற்பட்ட கடுமையான வெள்ளம் காரணமாக நாட்டின் பல்வேறு ரயில்வே பாதைகள் மூடப்பட்டன. அதை தொடர்ந்து சீரமைப்பு பணிகள் துரித கதியில் நடந்து வந்தன. தற்போது விரைவில் அவை போக்குவரத்து பயன்பாட்டுக்காக திறக்கப்படவுள்ளது.
இதுகுறித்து பேசிய ஆஸ்திரேலியாவின் ரயில்வே துறையின் தலைவரான ஆண்டனி மீரா, வரும் பிப்ரவரி 15 முதல் தெற்கு ஆஸ்திரேலியா முதல் டார்வின் மற்றும் பெர்த் வரையிலான ரயில்வே பாதை மீண்டும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர் வரலாறு காணாத வெள்ளத்தில் இருந்து ரயில்வே பாதையை மீட்டெடுப்பது பெரும் சவாலாக இருந்தது. விரைவில் ரயில்வே பாதை பயன்பாட்டுக்கு வரும் பட்சத்தில், விநியோகம் செய்யப்படும் பொருட்களின் சங்கிலி தொடர் வழக்கம் போல இயங்கும் என நம்புவதாக ஆண்டனி மீரா கூறினார்.
Link Source: https://ab.co/3owvmjJ