Breaking News

நைஜீரியாவில் சிபோக் நகரத்தில் இருந்து போகோ ஹராம் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பெண்கள் 7 ஆண்டுகளுக்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோ ஹரம் உள்பட பல்வேறு பயங்கரவாத அமைப்புகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

இந்த பயங்கரவாதிகள் மாணவிகளை கடத்தி அவர்களை பிணைக்கைதிகளாக வைத்து கொண்டு அரசை மிரட்டி தங்களுக்கு தேவையான காரியத்தை சாதித்து கொள்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

Women abducted by Boko Haram terrorists from Chibok city in Nigeria have been released after 7 yearsஅந்த வகையில் நைஜீரியாவின் கடந்த 2017 ஆம் ஆண்டு 200 க்கும் மேற்பட்ட பெண்கள் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டனர். கடத்தப்பட்ட பெண்களை மீட்க அரசு தரப்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சர்வதேச அளவிலும் இந்த கடத்தலுக்கு எதிராக மனித உரிமை ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர். அதன் பயனாக 2017 ல் கடத்தப்பட்ட 270 பெண்களில் 82 பேர் பேச்சு வார்த்தைக்கு பிறகு விடுவிக்கப்பட்டனர். பின்னாட்களில் மேலும் 24 பேர் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் கடத்தப்பட்ட பெண்களில் ஒருவர் 7 வருடங்களுக்கு பிறகு விடுவிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள போர்னோ மாகாண ஆளுநர் Babagana Zulum, விடுவிக்கப்பட்ட பெண்ணுக்கு தேவையான மருத்துவ சிகிச்சையும், உளவியல் சிகிச்சையும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

Women abducted by Boko Haram terrorists from Chibok city in Nigeria have been released after 7 years,.மீட்கப்பட்டுள்ள பெண்ணின் பெற்றோரை அடையாளம் காணும் பணி நடைபெறுவதாகவும், விரைவில் அந்த பெண் அவரின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார். இந்தப் பெண் மீட்கப்பட்டது , ஏற்கனவே கடத்தப்பட்ட 100 க்கும் மேற்பட்ட பெண்களின் பெற்றோர் மனதில் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது போகோ ஹராம் தீவிரவாதிகள் பிடியில் 113 பெண்கள் இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நைஜீரியாவில் இதுவரை 10 மேற்பட்ட கடத்தல் சம்பவங்களில் 1000 க்கும் மேற்பட்ட பெண்கள் கடத்தப்பட்டுள்ளனர்.

Link Source: https://ab.co/3AqNlfe