Breaking News

தாஸ்மானியாவில் கணவரைக் கொன்ற பெண் சிறையில் இருந்து மேல்முறையீடு செய்த விவகாரம் : பெண் மீதான தண்டனை ரத்து செய்யப்பட்ட நிலையில் பரோலில் செல்ல அனுமதி

Woman who killed her husband in Tasmania appeals from prison. Woman allowed to go on parole as sentence commuted

தாஸ்மானியாவைச் சேர்ந்த Margaret Anne Otto, அது கணவர் Dwayne “Doc” Davies, தனது வாழ்க்கையை விட்டு வெளியேற வேண்டும் என்ற காரணத்திற்காக அவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் முடிவாக தனது கணவரை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்.

2017 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் தொடர்பான வழக்கு தொடர்ந்து நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

Woman who killed her husband in Tasmania appeals from prison. Woman allowed to go on parole as sentence commuted..2019 ம் ஆண்டு இந்த வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு சிறைத் தண்டனை அனுபவித்து வந்த Margaret Anne Otto, சிறையில் இருந்தவாறே தாஸ்மானியா கிரிமினல் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். டாட்டூ கலைஞரான Dwayne “Doc” Davies-ஐ 2017 ஆம் ஆண்டு Anne Otto தனது ரகசிய காதலனுடன் இணைந்து கொலை செய்ததாக கூறப்படும் நிலையில் துப்பாக்கியால் சுட்ட Bradley Scott Purkiss -க்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

இந்தக் கொலைச் சம்பவத்தின் போது உடனிருந்த Anne Otto, கொலைக்கு உடந்தையாக இருந்த குற்றத்திற்காக 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் அவர் கிரிமினல் மேல்முறையீட்டு நீதிமன்றத்தை அணுகிய நிலையில் வழக்கு விசாரிக்கப்பட்டு அவர் மீதான தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளது.

அவருடனான வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்ததாகவும் அதிலிருந்து வெளிவருவதற்கான தான் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டதாகவும் Anne Otto நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அவருக்கான தண்டனை ரத்து செய்யப்பட்டதுடன் தீர்ப்பு விவரங்களும் மாற்றப்பட்டுள்ளன நிலையில் ஆறு ஆண்டுகால சிறை தண்டனையில் மூன்று ஆண்டுகாலம் அருள் இல்லாமல் இருக்க வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். இந்நிலையில் Anne Otto பரோலில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Link Source: https://ab.co/3F87HMQ