Breaking News

அமெரிக்காவில் பெண் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் : முன்னாள் காவல்துறை அதிகாரிக்கு 57 மாதங்களாக சிறை தண்டனை குறைத்து நீதிமன்றம் உத்தரவு

Woman shot dead in US. Former police officer sentenced to 57 months in prison

ஆஸ்திரேலியா – அமெரிக்கா இரட்டை குடியுரியுமை பெற்ற 40 வயதான பெண் Justine Damond Ruszczyk. இவர் கடந்த 2017 ம் ஆண்டு தனது வீட்டின் அருகே தான் ஆபத்தில் இருப்பதாக 911 அவசர உதவி எண்ணுக்கு அழைத்துள்ளார்.

அப்போது அங்கு வந்த Minneapolis காவல்துறை அதிகாரியான Mohammed Noor நடத்திய துப்பாக்கிச்சூட்டில் Justine Damond Ruszczyk உயிரிழந்தார்.

Woman shot dead in US. Former police officer sentenced to 57 months in prison.இந்த விவகாரம் தொடர்பான வழக்கில் கைதான காவல்துறை அதிகாரி ஏற்கனவே 12 ஆண்டுகள் 6 மாதங்கள் சிறை தண்டனை பெற்று அதில் 29 மாதங்களாக சிறையில் கழித்து வருகிறார். இந்நிலையில் கொலை குற்றத்திற்கான முகாந்திரங்களுடன் பதிவு செய்யப்பட்ட மற்றொரு வழக்கிலும் Mohammed Noor குற்றவாளி என்பதை Minnesota நீதிமன்றம் உறுதி செய்தது. இதனையடுத்து சிறை தண்டனையை 57 மாதங்களாக குறைத்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.

வழக்கு விசாரணையின் போது Justine Damond Ruszczyk -ன் வழக்கறிஞர் உச்சபட்ச தண்டனையை காவல் அதிகாரிக்கு வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

Woman shot dead in US. Former police officer sentenced to 57 months in prison,..2019ஆம் ஆண்டு வழக்கு விசாரணையின் போது Mohammed Noor இந்த வழக்கில் எந்தவிதமான திட்டமிடலும் இன்றி துப்பாக்கி சூட்டை அரங்கேற்றியது. அதில் மனிதத்தன்மையற்ற முறையில் அவருக்கு செயல்பட்டதும் உறுதி செய்யப்பட்டது இதற்கு நீதிமன்றம் தனது கடுமையான கண்டனங்களை தெரிவித்து இருந்தது. அதேநேரத்தில் இந்த தீர்ப்பு தொடர்பாக கடுமையான விமர்சனங்களை முன் வைத்துள்ள Justine Damond Ruszczyk குடும்பத்தினர் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு இது சரியான தீர்ப்பு அல்ல என்று வேதனை தெரிவித்துள்ளனர்.

தீர்ப்புக்கு பிறகாக Justine Damond Ruszczyk குடும்பத்திற்கு 20 மில்லியன் அமெரிக்க டாலர்களை இழப்பீடாக வழங்குவதற்கு தயாராக உள்ளதாக Minneapolis நிர்வாகம் அறிவித்துள்ளது. இதே போன்று கடந்த ஆண்டு ஜார்ஜ் ப்ளாய்ட் உயிரிழந்த விவகாரத்தில் 27 மில்லியன் அமெரிக்க டாலர்களை இழப்பீடாக வழங்குவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Link Source: https://ab.co/3Gdd0f9