மெல்போர்னின் Albanvale நகரில் உள்ள Southeland பகுதியில் வீடு ஒன்றில் சந்தேகத்திற்கிடமான வகையில் தீ விபத்து ஏற்பட்டதாகவும் அந்த தீ விபத்தில் சிக்கி அந்த வீட்டில் இருந்த 36 வயதான பெண் உயிரிழந்து விட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கடுமையான தீ காயங்கள் காரணமாக அந்தப் பெண் உயிரிழந்து விட்டதாகவும் அதே நேரத்தில் வீட்டில் தீ பற்றி அதற்கான காரணங்கள் இதுவரை முழுமையாக வெளியாகவில்லை என்றும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதேநேரத்தில் தீ விபத்தில் சிக்கிய 38 வயதான ஆண் ஒருவர் மருத்துவமனையில் காவல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் மற்றும் 17 வயதான இளம்பெண் ஒருவர் காயங்களுடன் அந்த பகுதியில் இருந்து வெளியேறி விட்டதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. விக்டோரியா போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். குறிப்பிட்ட வீட்டில் விபத்து நிகழ்வதற்கு முன்னதாக மாலை நேரத்திலேயே நெருப்பு பற்ற வைப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டதும் அருகிலிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
தீயணைப்புத் துறையினர் வீட்டில் தீ பற்றி இடங்களை தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பிறகே அங்கு பெண் உயிரிழந்திருப்பது தெரியவந்ததாகவும், இது குறித்து புலனாய்வு போலீசார் தீ விபத்திற்கான காரணங்கள் குறித்து அங்கிருந்த மாதிரிகளை எடுத்து ஆய்வுக்கு உட்படுத்தி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தீ விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர்களிடம் விசாரணை நடத்தும் பட்சத்தில் மேலும் பல்வேறு விவரங்கள் தெரிய வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் விக்டோரியா காவல்துறை தெரிவித்துள்ளது.
Link Source: https://ab.co/3wgm9kx