Breaking News

பிரிஸ்பேனில் கார் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் பெண் ஒருவர் பலி.

Woman dies in Brisbane car crash

பிரிஸ்பேனின் புறநகரில், 75 வயதான பெண் ஒருவர் தனது கார் திடீர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில், உயிரிழந்தார்.

லான்சிங் பகுதியில் கார் அடித்துச் செல்லப்பட்ட, தகவல் கிடைத்ததும், அவசர ஊர்திகள் விரைந்தன.

Woman dies in Brisbane car crash.சுமார் மூன்று மணி நேரத்திற்குப் பிறகு, முழுமையாக நீரில் மூழ்கிய செடான் கார் ஒன்று அப்பகுதியில் மீட்புக் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அதை நீரில் இருந்து அகற்ற, ஒரு இழுவை இயந்திரமும் வரவழைக்கப்பட்டது. வாகனத்தின் உள்ளே ஓட்டுநர் இருக்கையில் உயிரிழந்த நிலையில் ஒரு பெண் கிடந்துள்ளார். எதிர்பாரா ஆக்ரோஷ வெள்ளமே இவ்விபத்திற்கு காரணம் என காவல்துறையினர் தெரிவித்தனர். வாகனத்தைக் கண்டறிய காலதாமதமானதற்கும் இதுவே காரணம் என்று கூறப்படுகிறது.

வாகனம் கண்டறியப்பட்டபோது, பெரிய மரக்கிளை ஒன்றும் வாகனத்தின் மீது விழுந்துகிடந்துள்ளது.

தடயவியல் துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

விசாரணைக்கு உதவக்கூடிய தகவல்கள் ஏதேனும் தெரிந்தவர்கள் தாமாக முன்வருமாறு காவல்துறையினரால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

Link Source: https://ab.co/3dDciL4