Breaking News

வடக்கு குயின்ஸ்லாந்தில் அருவியில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்தார் : அழகான சுற்றுலாத் தளம் ஆபத்தான இடமாக மாறி வருகிறது.

வடக்கு குயின்ஸ்லாந்தின் Cairns நகரில் உள்ளது வின்டின் அருவி. மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தளமான இந்த அருவியில் உள்ள இன்பினிடி குளமும் அதனை ஒட்டிய அருவியும் அமைந்திருக்கும். இந்த அருவியில் Cairns நகரை சேர்ந்த 58 வயதான பெண் ஒருவர் அருவியின் 40 மீட்டர் உயரத்தில் இருந்து தவறி விழுந்து உயரிழந்தார்.

Cairns நகரின் தென் பகுதியில் 60 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள வின்டின் அருவியின் மேலுள்ள குளத்தில் தவறி விழுந்த பெண் ஞாயிறன்று பிற்பகல் 1 மணிக்கு உயிரிழந்ததாக வடக்கு குயின்ஸ்லாந்து காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Woman dies after falling from waterfall in northern Queensland. Beautiful tourist site turns dangerousஹெலிகாப்டர் உதவியுடன் தேடப்பட்டு வந்த நிலையில் மாலை 4 மணி அளவில் அப்பெண்ணின் உடல் மீட்கப்பட்டது. இது ஒரு சோகமான சம்பவம் என மாநில அவசரகால மீட்புப்பணிகள் பிரிவின் Peter Rinaudo கூறியுள்ளார். தங்களது குழுக்களை துரிதப்படுத்தி வின்டின் அருவியின் அனைத்து பகுதிகளிலும் தேடுதலை தீவிரப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு குயின்ஸ்லாந்தின் அழகிய சுற்றுலாத் தளம் தற்போது ஆபத்து நிறைந்த பகுதியாக மாறி வருகிறது. சாகசங்களில் ஈடுபட விரும்புவோருக்கும், புகைப்படக்கலைஞர்களுக்கும் சிம்மசொப்பனமாக விளங்கி வரும் இந்த இன்பினிடி குளம் மற்றும் அதனையொட்டிய வின்டின் அருவி.

இந்நிலையில், குளங்களில் இருந்து அருவி வெளியேறும் இடங்களில் குன்றுகள் உள்ளதாகவும், மிகவும் குறுகலான இடைவெளியில் தண்ணீர் வெளியறுவதால் விபத்து நடக்க அதிக வாய்ப்பிருப்பதாகவும் Rinaudo கூறியுள்ளார்.

இந்நிலையில் உயிரிழந்த பெண் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர் விரைவில் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.

Link Source: https://ab.co/3o4AUko