Breaking News

மேற்கு ஆஸ்திரேலியாவில் காவல்துறையினரால் தாக்கப்பட்டு பெண் உயிரிழந்த விவகாரம் : பெர்த் நீதிமன்றத்தில் ஆதாரங்களை தாக்கல் செய்த பெண்ணின் தாயார் Anne Jones

Woman beaten to death by police in Western Australia. Anne Jones, mother of woman who filed evidence in Perth court

2019ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி மேற்கு ஆஸ்திரேலியாவின் Geraldton ஊரக பகுதியில் நடைபெற்ற சம்பவம் ஒன்றில் Noongar – Yamatji பூர்வகுடி பெண்ணான JC -யை காவல்துறையினர் துரத்திச் சென்று துப்பாக்கியால் சுடப்பட்டதில் அவர் உயிரிழந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு ஆதாரங்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு வரும் நிலையில் உயிரிழந்த பெண்ணின் தாயார்Anne Jones தற்போது குற்றம் சாட்டப்பட்ட காவல்துறை அதிகாரி தான் தனது பெண்ணை சுட்டுக் கொன்றார் என்பதற்கான முக்கிய ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். நீதிமன்றம் பல்வேறு பாதுகாப்பு காரணங்களுக்காக குறிப்பிட்ட போலீஸ் அதிகாரிகளின் பெயர்களை வெளியிட மறுத்துள்ளது.

Woman beaten to death by police in Western Australia. Anne Jones, mother of woman who filed evidence in Perth court.போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட பெண் JC அதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் Greenough Regional சிறையிலிருந்து தண்டனை முடிந்து வெளி வந்துள்ளார். தனது 16வது வயதில் இருந்து Geraldton பகுதியில் வசித்து வரும் JC சிறை வாழ்க்கைக்குப் பின்னர் தனது வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்துவதில் பல்வேறு சிரமங்களை சந்தித்து வந்துள்ளார். Greenoughசிறையிலிருந்து அவரை அழைத்துக்கொண்டு Geraldton நகர் பகுதியில் இருந்து 100 கிலோமீட்டர் தள்ளி உள்ள Mullewa பகுதிக்கு அழைத்து வந்து அவரை வீட்டில் விட்டதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார். ஆனால் ஒரு இரவு மட்டுமே வீட்டில் தங்கிய JC, Geraldton நகரிலேயே தான் தனது நண்பர்களோடு வசிக்கப் போவதாக தெரிவித்துள்ளார்.

Woman beaten to death by police in Western Australia. Anne Jones, mother of woman who filed evidence in Perth court..JC உயிரிழந்த அன்று காலை அப்பகுதியில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் மதுபானத்தை திருடியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டு கடை ஒன்றில் தாக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் Geraldton நகரில் உள்ள பல்வேறு உறவினர்களின் வீடுகளுக்கும் சென்று வந்த JC, கடுமையான மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது மேலும் தற்கொலை செய்யும் எண்ணத்தோடு நகர்ப்பகுதிகளில் கையில் கத்தியோடு JC சுற்றி வந்ததாகவும் அந்த நேரத்தில் காவல்துறையினர் அவரது வயிற்றுப் பகுதியில் சுட்ட நிலையில் அவர் அதே இடத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில் குற்றம் சாட்டப்பட்ட காவல் அதிகாரிகள் தொடர்பான பல்வேறு ஆதாரங்களை தாயார் Anne Jones தாக்கல் செய்துள்ளார்.

Link Source: https://bit.ly/3oEc2C8