Breaking News

கடந்த சனிக்கிழமை ஆஸ்திரேலிய பொதுத்தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் இன்னும் 9 மாகாணங்களில் பதிவான வாக்குகளை முடிவு செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது.

With the Australian general election over last Saturday, the drag on deciding the number of registered voters in nine more provinces continues.

ஆஸ்திரேலியாவில் பொதுத்தேர்தல் கடந்த சனிக்கிழமை நடந்து முடிந்தது. இதில் தொழிலாளர் கட்சி 73 இடங்களை கைப்பற்றி வெற்றி பெற்றது. ஆளுங்கட்சியாக இருந்த லிப்ரல் கட்சி 54 இடங்களை பிடித்து ஆட்சியை இழந்தது.

ஆஸ்திரேலியாவில் ஆட்சியமைக்க மொத்தம் 76 இடங்கள் தேவை. ஆனால் பெரும் வாக்குகளை பெற்றுள்ள தொழிலாளர் கட்சி வெறும் 76 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. அதனால் இன்னும் 3 இடங்கள் தேவைப்படுகிறது.

இந்நிலையில் இன்னும் 8 மாநிலங்களில் தேர்தல் முடிவுகளில் இழுபறி நீடிக்கிறது. டாஸ்மானியாவின் பாஸ் மற்றும் லைனாஸ், குயின்ஸ்லாந்தில் பிரிஸ்பேன், நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் கவ்பவர், ரிச்மாண்ட் மற்றும் கில்மோர், விக்டோரியாவின் டீகின் மற்றும் மக்நாமாறா, சவுத் ஆஸ்திரேலியாவின் ஸ்டெரட் உள்ளிட்ட தொகுதிகளில் இன்னும் முடிவு வெளியாகவில்லை.

இதற்கிடையில் கடிதம் வெளியாக பெறப்பட்ட வாக்குகளின் முடிவு இன்னும் 2 வாரங்களில் தெரியவரும். இதற்காக ஆஸ்திரேலியாவின் தேர்தல் ஆணைய ஊழியர்கள் தொடர்ந்து வாக்குகளை எண்ணும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் முடிவுகள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.