Breaking News

தமிழகத்தை தாக்குமா யாஸ் புயல் ? உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தயார் நிலையில் பேரிடர் மீட்புக் குழுவினர்

Will Yas storm hit Tamil Nadu

கிழக்கு மத்திய வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. யாஸ் என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் தமிழகத்தில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகி உள்ள இந்த தாழ்வு நிலை இன்று இரவு அல்லது நாளை அதிகாலை புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

அதி தீவிர புயலாக உருவெடுக்கும் யார் 26 ஆம் தேதி கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்திற்கு இடையே புயல் கரையை கடக்கும் என்றும், அது திசை மாறி வங்கதேசம் அருகே கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கரையைக் கடக்கும் போது புயலின் வேகம் அதிகரிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Will Yas storm hit Tamil Nadu.இதனால் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் கன்னியாகுமரி தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது. கடல் அலையின் சீற்றம் தற்போதே அதிகமாக காணப்படுவதால் 26 ஆம் தேதி புயல் கரையை கடக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் இருக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இந்நிலையில் பிரதமருடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற இதற்குப் பின்னர் தமிழகத்தில் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பேரிடர் மீட்பு குழுவினரும் தீயணைப்புத் துறையினரும் மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Link Source: https://bit.ly/3hRQb6O