Breaking News

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்படலாம் : பிரிட்டன் மேல்முறையீட்டு நீதிமன்ற உத்தரவை அடுத்து அதிகரிக்கும் நெருக்கடி

WikiLeaks founder Julian Assange could be deported to US. escalating crisis following UK appeals court order

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜூலியன் அசாஞ்சே, தனது கிரிமினல் குற்றங்களுக்கான தண்டனையை அடையும் அடுத்த நிலையை எட்டியுள்ளார். அமெரிக்காவில் அரசு கணினிகளை ஹேக் செய்து அதன் மூலம் தகவல்களை திருடி வெளியிட்டதாக கைது செய்யப்பட்ட அவர் லண்டனில் தஞ்சம் அடைந்தார். மேலும் அவரது விக்கிலீக்ஸ் இணையதள பத்திரிகை வாயிலாக பல்வேறு நாடுகளின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

தற்போது லண்டனில் உள்ள பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜூலியன் அசாஞ்சேவை, அமெரிக்காவிற்கு நாடுகடத்துவதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று பிரிட்டன் நீதிமன்றத்தை அமெரிக்கா நாடியது. 50 வயதான ஜூலியன் அசாஞ்சே அமெரிக்காவில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டால் அவர் மன அழுத்தத்தின் காரணமாக தற்கொலை செய்து கொள்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக நீதிமன்றம் கூறியது அதே நேரத்தில் அமெரிக்காவின் கோரிக்கையையும் நிராகரித்தது.

இந்த தீர்ப்பை எதிர்த்து பிரிட்டன் மேல்முறையீட்டு நீதிமன்றத்தை அமெரிக்கா நாடியது. ஜூலியன் அசாஞ்சேவை நாடு கடத்த அனுமதித்தால் அமெரிக்கா வழங்கும் தண்டனையை அவர் தனது சொந்த நாடான ஆஸ்திரேலியாவில் இருந்தபடியே அனுபவிக்கலாம் என்று மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் வாஷிங்டன் சார்பில் வழக்கறிஞர் தெரிவித்தார். ஜூலியன் அசாஞ்சே மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதற்கான மருத்துவ ரீதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும் அவர் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.

WikiLeaks founder Julian Assange could be deported to US. escalating crisis following UK appeals court order.இதனை அடுத்து பிரிட்டன் மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி குறிப்பிட்டுள்ள தீர்ப்பில் அவர் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டால் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொள்வார் என்ற கூற்றை ஏற்க முடியாது என்று கூறியுள்ளார். இதனையடுத்து ஜூலியன் அசாஞ்சே அமெரிக்காவிற்கு நாடு கடத்தப்படுவதற்கு வாய்ப்பு அதிகம் உருவாகி உள்ளது. அதே நேரத்தில் அசாஞ்சி சார்பில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதனையடுத்து வழக்கு மீண்டும் கிழமை நீதிமன்றத்திற்கு சென்று உச்சநீதிமன்றத்தில் நிறைவடையும் என்றும் அதே நேரத்தில் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் வழிகாட்டு நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் என்றும் நீதிபதிகள் Burnett, Holroyde கூறியுள்ளனர்.

அதே நேரத்தில் அசாஞ்சேவின் ஆதரவாளர்கள் நீதிமன்ற வளாகத்தில் கூடி கையில் பதாகைகளை ஏந்தியவாறு அவரை லண்டன் சிறையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று முழக்கங்களை எழுப்பினர்.

இந்நிலையில் தெற்கு அமெரிக்காவில் சட்ட நிபுணர்கள் குழுவை சேர்ந்த ஸ்டெல்லா மோர் இசை அசாஞ்சே திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் இவர்களது பதிவு திருமணம் விரைவில் நடைபெறுவதற்கான அனுமதியை பிரிட்டன் சிறை நிர்வாகம் வழங்கி இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Link Source: https://bit.ly/3lWoKKq