Breaking News

கிரீன் ஹைட்ரஜன் வருங்காலத்தின் எரிபொருள் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கும் நிலையில்,கிரீன் ஹைட்ரஜன் குறித்த விவாதம் மேலும் அதிகரித்துள்ளது.

கிரீன் ஹைட்ரஜன் வருங்காலத்தில் சூழியல் பாதிப்பை ஏற்படுத்தாத எரிபொருள் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

ஹைட்ரஜன் சுற்றுப்புறத்தில் அபரிமிதமாக நிறைந்திருக்கும் ஒரு வாயு. நீர் மூலக்கூறில் 2 பங்கு ஹைட்ரஜன் உள்ளது. நீரை மின்சாரத்தால் பகுப்பாய்வு செய்யும் போது ஹைட்ரஜனை தனியாக பிரிக்க முடியும். ஆஸ்திரேலியாவில் சூரிய சக்தி அதிகமாக கிடைப்பதால் இதனை கொண்டு கரியமில்லா மின்சாரத்தையும்,கிரீன் ஹட்ரஜனையும் உருவாக்க முடியும் என்றும் அவர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

While researchers believe that green hydrogen is the fuel of the future, the debate over green hydrogen has intensified. 1கிரீன் ஹைட்ரஜன் வணிக ரீதியிலான உற்பத்தியில் வெற்றிகண்டால் அது ஒரு புதிய தொழிற்புரட்சிக்கு வழிவகுக்கும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். ஜெர்மனி எற்கனெவே கிரீம் ஹைட்ரஜன் தொழில்நுட்பத்தை கண்டறிய பல பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது.ஆஸ்திரேலியா சுமார் 570மில்லியன் டாலரை முதலீடு செய்துள்ளது.

கிரீன் ஹைட்ரஜன் தொழில்நுட்பத்தால் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் இத்துறை சார்ந்தவர்கள் நம்பினாலும, ஹட்ரஜன் உற்பத்தி செலவு அதிகரிக்குமோ என்ற சந்தேகமும் அவர்களுக்கு உள்ளது.

ஆனால் கிரீன் ஹைட்ரஜன் தொழில்நுட்பத்தில் ஆஸ்திரேலிய முன்னிலை பெறும்பட்சத்தில் சூப்பர் பவராக மாறும் என்றும் ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்