Breaking News

தொழிலாளர் கொள்கை தொடர்பாக பிரதமர் ஸ்காட் மோரீசன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆண்டனி அல்பானிஸ் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இருவரும் நேருக்கு நேர் நடைபெறும் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கெடுத்து பேசவுள்ளனர்.

While Prime Minister Scott Morrison and opposition leader Anthony Albanese Have been embroiled in controversy over their labor policy, the two are set to attend a face-to-face campaign meeting.

புனித வெள்ளி காரணமாக ஆஸ்திரேலியாவில் தேர்தல் பரப்புரை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து சனிக்கிழமை முதல் இருவரும் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.

எனினும் புனித வெள்ளி அன்று சிறியளவில் நடத்தப்பட்ட பரப்புரையில் இருவரும் பங்கேற்றனர். ஆனால் கூட்டத்தில் மக்களுடன் எதுவும் அவர்கள் உரையாடவில்லை. பிரதமர் மோரீசன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் அல்பானிஸ், வரும் 20-ம் தேதி நேருக்கு நேராக நடக்கும் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்று பேசவுள்ளனர்.

ப்ரிஸ்பேனில் நடைபெறும் கூட்டத்தில் மக்களின் கேள்விகளுக்கு இருவரும் பதிலளித்து பேசுகின்றனர். மக்கள் மேடை என்று கூறப்படும் இந்நிகழ்ச்சியை ஸ்கை நியூஸ் ஊடகத்தைச் சேர்ந்தவர்கள் ஏற்று நடத்தவுள்ளனர்.