Breaking News

கிறிஸ்துமஸ் விடுமுறை காரணமாக பலரும் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்ட நிலையில், கொரோனா பரிசோதனை மையங்களில் முடிவை எதிர்பார்த்து காத்திருப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது.

விக்டோரியா மாகாணத்தில் கொரோனா பரிசோதனை மேற்கொண்டவர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் சோதனை முடிவுகள் வழங்கப்பட்டு வந்தன. ஆனால் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை கொண்டாட பல ஊழியர்கள் விடுமுறையில் சென்றுவிட்டனர். இதனால் பரிசோதனை முடிவுகளை எதிர்பார்த்து காத்திருப்போரின் எண்ணிக்கை ஒவ்வொரு சோதனை மையங்களிலும் அதிகமாகி வருகிறது.

அதன்காரணமாக நியூ சவுத் வேல்ஸ் மாகாண அரசு, கொரோனா அறிகுறிகள் இருந்தால் மட்டுமே பரிசோதனை செய்யப்படும் என்கிற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதுவும் சோதனைக்கு வரும் நபருடன் இருந்தவர்கள் அல்லது சேர்ந்து பயணித்தவர்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் மட்டுமே பரிசோதனை செய்ய முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

While many have moved to their hometowns due to the Christmas holidays, the growing number of people waiting for results at corona testing centers continues to be a cause for concern..தொடர்ந்து கூயின்ஸ்லேண்டு மாநில முதல்வரும் பரிசோதனை முடிவுகளை வெளியிட கால்நிர்ணயம் அறிவித்துள்ளார். தொடர்ந்து அரசியல் தலைவர்களின் நடவடிக்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள மூத்த மருத்துவர்கள், கொரோனா பரவல் குறித்த மக்களின் சிந்தனையை கட்டுப்படுத்த நினைப்பது தவறு. பரிசோதனை முடிவுகளை பெறுவதில் அதிகரித்து வரும் அழுத்தத்தை குறைத்த அரசு சரியான அணுகுமுறையை கையாள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

Link Source: https://ab.co/3HkLAn6