இந்த சம்பவம் ஆஸ்திரேலியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே உடல்நலக் கோளாறால் அவதிப்பட்டு வந்த சிறுமி, முறையாக கவனிக்கப்படாமல் இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து சிறுமி சார்லியின் மரணம், குற்றவியல் புறக்கணிப்பு வழக்காக காவல்துறையால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிறுமி வசித்து வந்த வீட்டில், அவளுடைய 5 சகோதர சகோதிரிகளுடம் உடனிருந்துள்ளனர். அப்படியிருந்து முறையான கவனிப்பின்றி சிறுமி உயிரிழிந்திருப்பது விசாரணையில் உறுது செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து காவல்துறையினர் உயிரிழந்த சார்லியின் சகோதர சகோதிரிகளை அந்த வீட்டில் இருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.
சிறுமியின் தாயாரிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. உயிரிழக்கும் நாள் வரை சிறுமிக்கு உடல்நலக் கோளாறு இருந்தது தெரியவில்லை. அப்படியொரு பாதிப்பு இருந்ததாக அவள் வெளிக்காட்டவுமில்லை. என்னை மீறி இந்த துயர சம்பவம் நடந்துவிட்டதாக காவல்துறையினரிடம் சார்லியின் தாயார் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதையடுத்து அடிலேய்டு காவல்துறையினர் மனித சேவைகளுக்கான துறை, வீட்டுவசதி ஆணையம், கல்வித் துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்புத் துறையினரிடம் அடுத்தடுத்து விசாரணை நடத்தவுள்ளனர். இதுதொடர்பாக பேசிய, தெற்கு ஆஸ்திரேலியாவின் துணை முதல்வர் சூசன் குளோஸ், சிறுமி சார்லி உயிரிழந்த சம்பவத்தை அறிந்தபோது மிகவும் வேதனையும் கவலையும் எனக்குள் ஏற்பட்டது. இதுகுறித்தான விசாரணை ஆவணங்களை தொடர்ந்து கவனித்து வருவதாக தெரிவித்துள்ளார்.