Breaking News

Western Sydney-யுடன் இணைப்பில் மேலும் 3 புதிய கொரோனா தொற்றுகள் NSW -வில் பதிவாகியுள்ளது!

Northern Beaches-இல் எந்த ஒரு புது தொற்று தற்போது கண்டறியப்படவில்லை .Western Sydney-இல் கண்டறியப்பட்ட 3 புது தொற்றுகள் குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது .

Greystanes, Berala, Auburn மற்றும் Lidcombe போன்ற பகுதிகளில் வாழும் மக்களுக்கு கடும் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது .இது குறித்து Dr Kerry Chant கூறுகையில் ,புது தொற்றுகளில் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் 40 வயதும் ,மற்றொருவர் 20வயதும் உடையவர்கள் ஆவர் .மற்றொருவர் இந்த இரு தொற்று உடைவர்களுக்கு அருகில் வசிப்பவராக இருக்ககூடும் என்று கருதப்படுகின்றது .அவருக்கும் வயது 20.

கடந்த 24 மணி நேரத்தில் 32,010 கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.Croydon cluster மற்றும் Avalon cluster தொற்றும் ஒன்றோடொன்று தொடர்புடையது என்று Dr Chant மரபணு சோதனை மூலம் உறுதி செய்தார் .Premier Gladys Berejiklian வடக்கு கடற்கரைகளின் தெற்கு மண்டலத்தில் வசிப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது .

146 தொற்றுகளை கொண்ட Avalon cluster-இல் எந்த ஒரு புது தொற்றும் கண்டறியப்படவில்லை .இன்று முதல் விக்டோரியா NSW-கான எல்லையை மூடியது .இனி விக்டோரியாவிற்கு வரும் யாராக இருந்தாலும் 14 நாட்கள் தனிமைப்படுத்த படவேண்டும் .

விக்டோரியா தனது எல்லையை மூடுவதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்க பட நேரிடும் என்று Acting Victorian Premier Jacinta Allan தெரிவித்துள்ளார் .விடுமுறை நாட்கள்,பயணத்திட்டங்கள் போன்ற அனைத்திற்கும் இந்த முடிவு இடையூறுராக அமையும் என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார் .விக்டோரியாவில் வியாழக்கிழமை அன்று 5 தொற்றுகள் பதிவு செய்யப்பட்டன. வெள்ளிக்கிழமை காலை எந்த ஒரு புது தொற்றும் பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது .