வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா மாநிலத்தில் மாநில பேரிடர் குழுக் கூட்டம் நடைபெற்றது. இதில் கொரோனாவின் தற்போதைய நிலவரம் குறித்தும், அதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்புப் பணிகள் பற்றியும் பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.
அதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மார்க் மெக்கவுன், வெஸ்டர் ஆஸ்திரேலியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவர்கள் அல்லது கொரோனா பரவலுக்கு காரணமான இடத்தில் இருப்பவர்களும் பரிசோதனை செய்துகொள்ள வேண்டிய தேவையில்லை என்று தெரிவித்தார். ஒருவேளை குறிப்பிட்ட நபருக்கு தொடர்ந்து அறிகுறிகள் தென்பட்டால், அதை தொடர்ந்து அவர்கள் பரிசோதனை செய்துகொள்ளலாம். தொற்று பரவலுக்கு வாய்ப்புள்ள நபர்கள், தங்களை தனிமைப்படுத்திக் கொள்வது மேலும் தொற்று பரவுவதை தடுக்கும் என்று முதல்வர் மார்க் கூறினார்.
இதற்கிடையில் வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா மாநிலத்தில் புதியதாக 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரபல இரவுநேர கேளிக்கை விடுதி மற்றும் நார்த்ப்ரிட்ஜ் பகுதியிலுள்ள நூலுகக் குழு ஆகிய இடங்களில் இருந்து தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
Link Source: https://ab.co/3GbSUQU