Breaking News

குயின்ஸ்லாந்தில் களையிழந்த தந்தையர் தினக் கொண்டாட்டம் : கொரேனா தடுப்பு நடவடிக்கையால் சந்திக்க முடியாமல் பிரிந்து போன குடும்பங்கள்

Weedless Father's Day Celebration in Queensland. Families Divided by Corona Prevention

செப்டம்பர் 5ம் தேதி ஆஸ்திரேலியாவில் தந்தையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. வழக்கமாக வண்ணமயமாக களைகட்டும் இந்த நிகழ்வு கொரேனா பரவல் காரணமாக களையிழந்தது. குயின்ஸ்லாந்தில் எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் குடும்பத்தினர் ஒருவக்கொருவர் சந்தித்துக் கொள்ள முடியாமல் தவித்தனர்.

Weedless Father's Day Celebration in Queensland. Families Divided by Corona Prevention.தந்தைகள், பிள்ளைகள், உறவினர்கள் என வெவ்வேறு மாகாணங்களில் உள்ளவர்கள் எல்லைகள் மூடியுள்ளதன் காரணமாக வழக்கமான கொண்டாட்டங்களில் ஈடுபட முடியாமல் போனதாக வருத்தம் தெரிவித்துள்ளனர். ஒரு சில இடங்களில் காவல்துறையின் கடுமையான கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு கடைகள், உணவு விடுதிகள் போடப்பட்டு இருந்தன.

Coolangatta backstreet பகுதியில் தடுப்புகள் போடப்பட்டு காவல்துறையினர் எந்த நேரமும் முழுமையான கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வாகனங்களில் ரோந்து சென்று மக்களை ஒன்றுகூட விடாமல் தடுத்து வருகின்றனர். அதே நேரத்தில் தனி மனித இடைவெளியை பின்பற்றுமாறு அறிவுறுத்துவதும், மாஸ்க்குகளை விநியோகம் செய்வதும் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். கொரேனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி தந்தையர் தினத்தை மகிழ்ச்சியாக கொண்டாடுமாறு மக்களை காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

Weedless Father's Day Celebration in Queensland. Families Divided by Corona Prevention,.,நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்தின் பெரும்பான்மையான பகுதிகளில் முடக்க நிலை அமலில் உள்ளதால், அங்கும் கொண்டாட்டங்கள் களையிழந்தன. பலூன்கள், இனிப்பு, உணவுகள், விளையாட்டுகள் என வழக்கமான கொண்டாட்டங்கள் இல்லாத நிலையில் அவற்றைக் கொண்டு வித்தியாசமான ஒன்றுகூடல் நிகழ்வுகளுக்கு மக்கள் திட்டமிட்டு இருந்தனர். இந்த முடக்க நிலை சூழல் குடும்பங்களை பிரித்துவிட்டதாகவும், மாயஜாலம் நிகழ்ந்து இந்த நிலை மாற வேண்டும் என்றும் தந்தையர் தின கொண்டாட்டத்தில் ஈடுபட்ட குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Weedless Father's Day Celebration in Queensland. Families Divided by Corona Prevention..இதுபோன்ற இக்கட்டான சூழல் காரணமாக தாங்கள் தங்கள் தந்தையை நீண்ட நாட்களுக்கு பிறகு சந்திப்பதாகவும், தங்கள் பிள்ளைகள் தாத்தாவை பார்க்காமல் மிகவும் தவித்ததாகவும், எல்லையில் சந்தித்துக் கொண்ட Nick Lowien குடும்பத்தினர் கூறியுள்ளனர். மிக மோசமான நிலையில் இது கொஞ்சம் இனிப்பான சந்திப்பு என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். தந்தையர் தினத்தில் கட்டுப்பாடுகளுடன் உறவினர்கள் சந்தித்து கொண்டது உணர்வுப்பூர்வமான நிகழ்வாக மாறிப் போனது. மக்களின் கட்டுப்பாடுகள் தான் இந்த நிலையை விரைவில் மாற்றி வழக்கமான கொண்டாட்டங்களுக்கு வழி வகுக்க வேண்டும் என்றும், குயின்ஸ்லாந்து மற்றும் நியுசவுத் வேல்ஸ் மாகாண மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Link Source: https://ab.co/3yN56nQ