Breaking News

NSW-வை தொடர்ந்து சிட்னிக்கும் வெள்ள அபாயம் -வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை !

weather forecast-Sydney is at risk of flooding following NSW-Meteorological Center Warning

பெரும் மழையால் NSW கடற்கரையை ஒட்டியுள்ள இடங்கள் பெரும் வெள்ளம் காரணமாக அழிவின் பாதைக்கு செல்கிறது. வெள்ள எச்சரிக்கை மற்றும் அங்கிருந்து நகரும் உத்தரவுக்கு பிறகும் ,பல இடங்களில் வெள்ளநீர் அதிகரித்து வருவதால், உயிர்சேதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

weather forecast-Sydney is at risk of floodingசனிக்கிழமை 150 மில்லி மீட்டர் மழை பெய்ய வாய்ப்புள்ள இடங்களில் சிட்னியும் ஒன்று. அடுத்த 24 மணி நேரத்தில் இதைப்போன்று அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், அதனால் சிட்னியின் நீர்வழி தடங்கள் ஆபத்து நிறைந்த பகுதியாக மாற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. NSW Mid North Coast ல் மழையின் அளவு அதிகரித்தால் அங்கு இருக்கும் Warragamba அணை வார இறுதியில் நிரம்பி வழியலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Mid North கடற்கரை வானிலை மாற்றத்தால், அந்த இடம் நிலச்சரிவு மற்றும் தீவிர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 47 ஆண்டுகள் இல்லாத அளவு பெரும் மழையால் Kempsey, நகரத்திலிருந்தும் மக்கள் வெளியேறுமாறும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

weather forecast-Sydney is at riskமாலையில் Port Macquaie ல் வெள்ளப்பெருக்கிலிருந்து மக்களை காப்பாற்ற மணல் மூட்டைகளால் சாலை மற்றும் வீட்டை சுற்றியும் அடைக்கப்பட்டது. மேலும் மிகவும் தாழ்வான இடமான Bulahdelah, Wauchope மற்றும் Rawdon Island ம் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. Port Macquaie வில் உள்ள பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பள்ளியிலிருந்து அழைத்து வர விரைந்தனர். இது மிகவும் பயமாக இருப்பதாக அவர்கள் கூறினர்.

மழைநின்றால் பாதிப்பு குறையும். ஒரு சில நேர மழையினால் மிக அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது உயிரை பறிக்கும் ஆபத்தானது என்று வெப்பநிலை அறிவிப்பாளர்கள் கூறினர். மேலும் அங்குள்ள 20க்கும் மேற்பட்ட ஆறுகள் நிரம்பி வழிகின்றதால் வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு அதிகாரிகள் மக்கள் வெள்ள அபாய எச்சரிக்கைகளை கேட்குமாறு வலியுறுத்தினார்கள். மேலும் இந்த வார இறுதிக்குள் Hunter ன் தெற்கே நகர்ந்து இன்னும் மோசமான நிலையை அடையும் என்றனர்.

weather forecast-Sydney is at risk 1NSWவில் மிக மோசமான வானிலை உள்ளதால், நாளை ஆபத்தான அதிக மழை பெய்யும். இது உயிரை எடுக்கும் மோசமான விளைவை தரும் என்று மூத்த காலநிலை ஆய்வாளர் Agata Imielska கூறினார். மேலும் சிட்னியில் மிக மோசமாக மழை பெய்வதால் அங்கு இருப்பவர்கள் புத்திசாலித்தனமாக தங்களுடைய முடிவை எடுக்குமாறு கூறினார். தேவையில்லாத பயணத்தை தவிர்க்குமாறு கேட்டுக் கொண்டார்.

NSW மாநிலத் தலைவர் Gladys Berejiklian இந்த வார இறுதி மோசமான வானிலையால் பாதிப்பு அதிகமாக இருக்கும். இதனால் மக்கள் எச்சரிக்கையாக வீட்டிலேயே இருந்து உயிர்சேதத்தை தவிர்க்க வேண்டும் என்றார்.Chief Superintendent Greg Swindells கூறுகையில், வானிலை எச்சரிக்கையை கவனமாக கேட்டு பின்பற்றி உயிர்சேதத்தை போக்கவேண்டும். மக்கள் தங்களை பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் பார்த்து கொண்டால் போதும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.