Breaking News

அணுஆயுத நீர்மூழ்கி கப்பல் ஒப்பந்த விவகாரத்தில் ஆஸ்திரேலியாவை முழுமையாக நம்புகிறோம் : ஒப்பந்தம் குறித்து அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் Jake Sullivan விளக்கம்

பிரிட்டன், அமெரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் கூட்டமைப்பில் உருவான ஆக்கஸ் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆஸ்திரேலியாவுக்கு அணுஆயுத நீர்மூழ்கி கப்பல்களை வழங்குவதற்கான தொழில்நுட்ப ஒப்பந்தத்தை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான உறவு பெருமளவு பாதிக்கப் பட்டுள்ள நிலையில் அது படிப்படியாக சரியாகும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்திருந்தார்.

We trust Australia fully on nuclear submarine deal. US National Security Adviser Jake Sullivan.இந்நிலையில் ஆக்கஸ் ஒப்பந்தத்தில் ஆஸ்திரேலியாவுக்கு அணுஆயுத நீர்மூழ்கி கப்பல்களை வழங்கும் ஒப்பந்தம் குறித்து கருத்து தெரிவித்துள்ள வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் Jake Sullivan, இந்த விவகாரத்தில் பைடன் அரசாங்கம் ஆஸ்திரேலியாவை முழுமையாக நம்புவதாகவும் இது மிகப் பெரிய ஒப்பந்தம் என்றும் அவர் கூறியுள்ளார். அமெரிக்க ராணுவத்தின் பலத்தை மேம்படுத்துவது மற்றும் கூட்டமைப்பு நாடுகள் உள்ளன ராணுவ உறவை பலப்படுத்துவது உள்ளிட்ட விவகாரங்களில் ஒரு புதிய அத்தியாயத்தை படைக்க பைடன் அரசாங்கம் தயாராகி வருவதாக Jake Sullivan கூறியுள்ளார்.

அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே ஏற்பட்டுள்ள மோதல் தவிர்க்க முடியாத ஒன்று என்றும், தங்களது கொள்கைகளில் உறுதியாக உள்ள அமெரிக்க அரசாங்கம் சீனாவின் அனைத்து சவால்களையும் முறியடித்து முன்னேறிச் செல்லும் என்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் Jake Sullivan தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் பொறுப்புடன் நடந்து கொள்வோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

We trust Australia fully on nuclear submarine deal. US National Security Adviser Jake Sullivan..அணுஅயுத நீர்மூழ்கி கப்பல் ஒப்பந்தம் ரத்து மற்றும் ஆக்கஸ் ஒப்பந்தம் காரணமாக பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா இடையே ஏற்பட்டுள்ள தற்காலிக பிரச்சனையை சரி செய்வதற்கான உரிய முயற்சிகளை அமெரிக்கா மேற்கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது. ஆக்கஸ் ஒப்பந்தம் தொடர்பாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரன் அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம், இது மிகவும் அருவருக்கத்தக்கது என்று கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது. கிளாஸ்கோ பருவநிலை மாநாட்டில் இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து பேசிக் கொண்ட நிலையில், ஒப்பந்தம் ரத்து தொடர்பாக எந்த வித முன்னறிவிப்பும் பிரான்சுக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் அதிபர் இமானுவேல் மேக்ரன் வருத்தம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அணுஆயுத நீர்முழ்கி கப்பல் ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு மிகப்பெரிய பந்தயம் என்றும், இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு மட்டுமல்ல அமெரிக்காவின் அதி நவீன தொழில்நுட்பம், பாதுகாப்பு விவகாரங்கள் குறித்து உலக அளவில் விடுக்கப்படும் சவாலாக இந்த ஒப்பந்தம் மாறி உள்ளதாகவும் வெள்ளை மாளிகை தேசி பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

Link Source: shorturl.at/kABJZ