Breaking News

அன்பும் வேடிக்கையும் நிறைந்த குடும்ப உறுப்பினரை இழந்துவிட்டோம் : கோவிட் தடுப்பூசி எடுத்துக் கொண்ட பின் உயிரிழந்த பெண் குறித்து நினைவு கூறும் குடும்பத்தினர்.

We have lost a loving and fun family member, family remembering the woman who died after taking the covid vaccine.

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் மத்திய கடற்கரையை ஒட்டியுள்ள பகுதியைச் சேர்ந்த 48 வயதான Genene Norris தான் உயிரிழந்தவர் ஆவார். கோவிட் 19 தடுப்பூசியான அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை போட்டுக்கொண்ட சில நாட்களில் ரத்தம் உறைதல் பிரச்சனை காரணமாக உயிரிழந்தார்.

அவருக்கு வேறு சில உடல் உபாதைகள் இருந்தாலும் உயிரிப்புக்கு ரத்தம் உறைதலே காரணாமாக இருந்ததாகவும், உரிய மருத்துவ பரிசோதனை மற்றும் விசாரணைக்குப் பின்னர் நோரிஸ் மரணம் குறித்த விரிவான விவரம் நமக்கு கிடைக்கும் என்றும் Therapeutic Goods Administration (TGA) கூறியுள்ளது.

அதே நேரம், உயிரிழந்த நோரிஸ் தன்னைச்சுற்றி இருப்பவர்களை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்திருக்கும் நபர் என்றும், அன்பும், வேடிக்கையும் நிறைந்த அவர் குடும்பத்தின் மீது ஆழமான பற்று கொண்டிருந்தவர் என்றும் நோரிஸ் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

We have lost a loving and fun family member, family remembering the woman who died after taking the covid vaccineஅவரது இழப்பு தங்களது குடும்பத்தில் பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டதாகவும், கடந்த வாரம் தங்களோடு பேசி சிரித்தவர் இப்போது இல்லை என்பதை தங்களால் நம்பமுடியவில்லை என்றும் நோரிஸ் குடும்பத்தினர் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

இக்கட்டான சூழலிலும், வருத்தத்திலும் நோரிஸ் குடும்பத்தினர் சிகிச்சை மேற்கொண்ட மருத்துவ பணியாளர்களுக்கு, அவர்களது சிறிய முயற்சிக்கு தங்களது நன்றியை தெரிவித்துள்ளனர்.

50 வயதுக்கு உட்பட்டவர்ரகள் பைசர் தடுப்பசி எடுத்துக் கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியாகும் முன்னரே நோரிஸ் அஸ்ட்ராசெனகா தடுப்பூசியை எடுத்துக் கொண்டுவிட்டார் என்றும், அன்புமிகுந்த பணியாளரை இழந்து தவிக்கிறோம் என்றும் நோரிஸ் பணியாற்றிய உணவு நிறுவனம் கூறியுள்ளது.

இந்த உயிரிழப்பு வழக்கத்திற்கு மாறான ஒன்று என்றும், இது தொடர்பாக ரத்த மாதிரிகளை கொண்டு உரிய பரிசோதனைகள் நடத்தப்படும் என்றும் TGA தெரிவித்துள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சர் நோரிஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது குடும்பத்திற்கு அனுதாபங்களை தெரிவித்துக் கொண்ட அவர், மக்களை பாதுகாப்பது தான் தங்களின் தலையாய கடமை அதற்கான உரிய மருத்துவ நடவடிக்கைகளை தொடர்ந்து எடுப்போம் என்று கூறியுள்ளார்.

50 வயதுக்கு மேல் உள்ளவர்கள் அஸ்ட்ராசெனகா தடுப்பூசியும், கீழுள்ளவர்கள் பைசர் தடுப்பூசியும் எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.