Breaking News

அமெரிக்காவில் கிறிஸ்துமஸ் ஊர்வலத்தில் கார் புகுந்ததில் 5 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 48 பேர் காயமடைந்திருப்பதாக Waukesha காவல்துறை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் விஸ்கான்சின் மாகாணத்தில் உள்ள வாகேஸ்ஷா நகரில் கிறிஸ்துமஸ் தினத்தை ஒட்டி பேரணி நடைபெற்றது. அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்களும், சிறுவர் சிறுமிகளும் இந்த பேரணியில் பங்கேற்றிருந்தனர். அப்போது அந்த பகுதியில் வேகமாக வந்த கார் ஒன்று பேரணிக்குள் புகுந்தது. இந்த விபத்தில் கார் சக்கரத்துக்கு கீழ் சிக்கி 5 பேர் பலியாகினர். பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Waukesha police say five people have been killed and 48 injured in a car crash at a Christmas rally in the United States..இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வக்கூசிய காவல்துறை தலைவர் Daniel Thompson, இந்த கோர சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 48 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவித்துள்ளார். இவர்களில் 18 பேர் குழந்தைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. 9 குழந்தைகள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார். விபத்தை ஏற்படுத்திய நபரை காவல்துறை கைது செய்துள்ளது.

Waukesha police say five people have been killed and 48 injured in a car crash at a Christmas rally in the United States...கைது செய்யப்பட்டுள்ள நபர் மில்வாக்குவே பகுதியை சேர்ந்த 39 வயதான நபர் Darrell E Brooks என்று காவல்துறை தெரிவித்துள்ளது. அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், ஏற்கனவே குற்றச்செயல்களில் ஈடுபட்டு பினையில் இருக்கும் இவர் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. காயமடைந்த சிறுவர்களுக்கு உரியை மன நல ஆலோசனை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதிய நிதி ஆதாரத்தை அரசு ஏற்படுத்தியுள்ளதாக உள்ளூர் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Link Source: https://ab.co/3l5dVW0