Breaking News

இந்தோனேசியாவில் தேடப்படும் நபரான கிளர்ச்சிக்குழு தலைவர் காட்டில் சுட்டுக் கொலை : ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த நபரை சுட்டுக்கொன்றது கூட்டு பாதுகாப்புக் குழு

Wanted rebel leader shot dead in Indonesia. Joint security team kills man linked to IS terrorist group

Ali Kalora வை தலைமையாகக் கொண்ட கிழக்கு இந்தோனேசிய முஜாகிதீன் அமைப்பைச் சேர்ந்த கிளர்ச்சிக் குழு Sulawesi தீவில் உள்ள வனப்பகுதியில் கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக சிறுபான்மை மக்கள் மற்றும் காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ராணுவம் மற்றும் காவல்துறை அடங்கிய கூட்டு பாதுகாப்புக் குழு மற்றும் கிளச்சிக்குழுவுக்கு இடையே நடைபெற்ற தாக்குதலில் Ali Kalora மற்றும் மற்றொரு நபரான Jaka Ramadan என்பவரும் சுட்டுக் கொலை செய்யப்பட்டதாக பாதுகாப்புக் படை பிரிகேடியர் Farid Makruf தெரிவித்துள்ளார். மேலும் தப்பியோடிய 4 பேரை தீவிரமாக தேடி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

Wanted rebel leader shot dead in Indonesia. Joint security team kills man linked to IS terrorist group,2014ம் ஆண்டு முதலே ஐஎஸ் நாடுகளோடு தொடர்பில் இருந்து வரும் கிழக்கு இந்தோனேசிய முஜாகிதீன் அமைப்பு, பல்வேறு தீவிரவாத தாக்குதல் சம்பவங்களில் தொடர்பில் இருந்து வருவதாகவும் அதற்கு கிளர்ச்சி குழுவின் தலைவராக Ali Kalora செயல்பட்டு வந்தது தெரியவந்துள்ளது. அவள் தேடப்பட்டு வந்த தீவிரவாதிகளில் முக்கியமான நபர் என்றும் பிரிகேடியர் Farid Makruf தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களாகவே Sulawesi மலைப் பகுதிகளில் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் தங்களது நடவடிக்கையை மேற்கொண்டு வந்த நிலையில், தீவிரவாத குழுக்களுக்கும் பாதுகாப்பு படைக்கும் இடையே அடிக்கடி மோதல் சம்பவங்கள் நடைபெற்று வந்தன.

2016, 2018 ஆண்டுகளில் நடைபெற்ற பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டிருப்பதாகவும் பாதுகாப்பு படைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது அதனைத் தொடர்ந்து காவல்துறை மற்றும் சிறுபான்மை கிறிஸ்தவ மக்கள் மீது கிளர்ச்சிக் குழு பதில் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், தற்போது அந்த அமைப்பின் முக்கிய தேடப்படும் நபரான Ali Kalora சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

Wanted rebel leader shot dead in Indonesia. Joint security team kills man linked to IS terrorist group.2002ஆம் ஆண்டு பாலியில் நடைபெற்ற குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய நபர்களை கைது செய்வது மற்றும் அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளில் இந்தோனேசிய கூட்டு பாதுகாப்பு படை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Link Source: shorturl.at/vMU34