Breaking News

குயின்ஸ்லாந்தில் சமூகப்பரவல் மூலமாக 2 பேருக்கு வைரஸ் பாதிப்பு – இளைஞர் மற்றும் பெண் ஒருவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை : பெருந்தொற்றை எதிர்கொள்ளும் அளவுக்கு மாகாணம் தயாராகவில்லை என குயின்ஸ்லாந்து ப்ரிமியர் கருத்து

Viral transmission of virus in 2 people in Queensland - youth and woman isolated and treated

நியூ சவுத் வேல்ஸ் பகுதியில் இருந்து வந்த தொற்று பாதித்த பாதித்த நபரிடம் Gold Coast பகுதியைச் சேர்ந்த 17 வயதான சிறுவன் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நிலையில் தொடர்பில் இருந்துள்ளான். அவனுக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 30 வயதான பெண் ஒருவர் மெல்போர்னில் வந்த நிலையில் அவருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

Viral transmission of virus in 2 people in Queensland - youth and woman isolated and treated.இதே போன்று GYMPIE பகுதியில் இருந்து வந்த ட்ரக் ஓட்டுநர் ஒருவருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக நியூ சவுத் வேல்ஸ் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனை அடுத்து புதிய தொற்றுப்பரவல் மையங்கள் தொடர்பான பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. அந்த பகுதிகளுக்கு குறிப்பிட்ட நேரத்தில் சென்று வந்தவர்கள் உடனடியாக தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

இந்நிலையில் குயின்ஸலாந்து மாகாணம் பெருந்தொற்றை சமாளிக்கும் வகையில் இன்னும் நோய் எதிர்ப்பு சக்தியுடன் தயாராகவில்லை என்பதேயே தொற்று பாதிப்புகள் உணர்த்துவதாக ப்ரீமியர் Annastacia Palaszczuk தெரிவித்துள்ளார். தற்போது தொற்று பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருவதாகவும், தடுப்பூசி செலுத்திக் கொள்வதே நமக்கான ஒரே பாதுகாப்பு என்றும் Annastacia Palaszczuk கூறியுள்ளார்.

Viral transmission of virus in 2 people in Queensland,16 வயதுக்கு மேற்பட்டவர்களில் 75,22 பேர் இதுவரை முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளதாகவும், 60.7 சதவீதம் பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்தில் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு உள்ளாக மாகாண எல்லைகளை டிசம்பர் 17ம் தேதி திறக்கும் அளவிற்கு நாம் தயாராவேண்டும் என்றும் ப்ரீமியர் Annastacia Palaszczuk தெரிவித்துள்ளார்.

குயின்ஸ்லாந்தில் பயிலும் சர்வதேச மாணவர்கள் நாடு திரும்புவதற்கான அனுமதியும் விரைவில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 90 சதவீதம் அளவுக்கு இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் மாணவர்களை அனுமதிக்க உள்ளதாகவும், அவர்களும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என்றும் குயின்ஸ்லாந்து சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Link Source: https://ab.co/3nrBRmK