Breaking News

உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதலில் Vinnytsia விமான நிலையம் முற்றிலும் தகர்ப்பு : Mariupol நகர் மீதான தொடர் தாக்குதல் காரணமாக மக்களை வெளியேற்றுவதில் சிக்கல்

உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து 11 ஆவது நாளைக் கடந்து தனது போரை நிறுத்தாமல் தொடர்ந்து வருகிறது. இந்நிலையில் குறிப்பிட்ட சில நகரங்களில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கான போரை நிறுத்தி வைக்குமாறு உக்ரைன் கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அங்கிருந்து மக்களை வெளியேற்றுவதற்காக மீண்டும் ரஷ்யா குண்டு மழை பொழிந்து வருகிறது. Vinnytsia விமான நிலையம் முற்றிலும் தரைமட்டமாக ரஷ்ய ராணுவத்தால் அழிக்கப்பட்டது. இதனை உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி உறுதிப்படுத்தியுள்ளார்.

Vinnytsia airport completely destroyed in Russia's attack on Ukraine. evacuation due to series of attacks on Mariupol,மேலும் Mariupol நகரில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கான கால அவகாசத்தை கொடுக்காமல் ரஷ்யா தொடர்ந்து தனது தாக்குதலை நடத்தி வருகிறது. அந்நாட்டு நேரப்படி காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை போர் நிறுத்தம் இருக்கும் என்றும் அந்த நேரத்தில் மக்கள் தங்கியுள்ள இடங்களில் இருந்து உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு வெளியேறுமாறு உக்ரைன் அதிகாரிகள் கேட்டுக் கொண்டிருந்தனர்.

ஆனால் குறிப்பிட்ட Mariupol, Volnovakha இரண்டு நகரங்களிலும் ரஷ்யா அந்த நேரத்திலும் தாக்குதலை நிறுத்தாமல் தொடர்ந்து வந்தது. உணவு உடை தண்ணீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்றி கடந்த ஆறு நாட்களுக்கும் மேலாக மக்கள் துறைமுக நகரங்களிலேயே இருந்து வருவதாகவும் அவர்களை காப்பாற்றும் நோக்கில் ரசிகர்களிடம் கோரிக்கை வைத்தும் பலனளிக்கவில்லை என்றும் உக்ரைன் வெளியுறவுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

குறிப்பிட்ட இரண்டு நகரங்களிலிருந்தும் மக்களை வெளியேற்றுவதற்கும் அவர்களுக்கான அடிப்படை தேவைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு தயாராக இருப்பதாக செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்துள்ளது. தொடர்ந்து போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பல்வேறு மீட்பு பணிகள் மற்றும் நிவாரண உதவிகளை வழங்கி வரும் இந்த அமைப்பு அந்தப் பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கு தேவையான உதவிகளை செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. இதற்காக உள்துறை அமைச்சகத்தின் உதவியையும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

Vinnytsia airport completely destroyed in Russia's attack on Ukraine. evacuation due to series of attacks on MariupolVinnytsia விமான நிலையத்தை 8க்கும் மேற்பட்ட ராக்கெட்டுகள் மூலமாக முற்றிலும் தரைமட்டமாக்கி உள்ளதாக தெரிவித்துள்ள உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, ரஷ்ய மக்களுக்கு ரஷ்ய மொழியிலேயே பேசி வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். ரஷ்யா நடத்தி வரும் தாக்குதல் காரணமாக பாதிக்கப்படப்போவது உக்ரைன் மட்டும் அல்ல ரஷ்ய மக்களும் தான் என்று அவர் கூறியுள்ளார்.

அதேநேரத்தில் உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் திட்டமிட்டபடி நடைபெற்று வருவதாகவும் படிப்படியாக பல்வேறு முக்கிய நகரங்களை கைப்பற்றி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இரு நாடுகளுக்கும் இடையே இரண்டு கட்ட அமைதி பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில், மூன்றாவது கட்ட போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று உக்ரைன் வெளியுறவுத்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Link Source: https://ab.co/3hPvnvm