Breaking News

கான்பெர்ரா விமானநிலையத்தில் தன்னை இன ரீதியாக விமர்சனம் செய்ததாக விக்டோரியாவின் க்ரீன்ஸ் கட்சி செனட்டர் Lidia Thorpe குற்றச்சாட்டு : விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக விமான சேவை நிறுவனம் அறிவிப்பு

Victoria's Greens senator Lidia Thorpe accused of racially abusing her at Canberra airport. airline announces comprehensive inquiry

விக்டோரியாவின் க்ரீன்ஸ் கட்சி செனட்டர் Lidia Thorpe, கான்பெர்ரா விமான நிலையத்திற்கு சென்ற போது அங்கு Virgin ஆஸ்திரேலியா ஊழியர்கள் தன்னை இன ரீதியாக விமர்சித்து பேசியதாக கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

கடந்த டிசம்பரில் நேஷனல் கேபிடல் செல்வதற்காக அதிவிரைவு வரிசையில் காத்திருந்ததாகவும், ஏழு நிமிடங்களில் அந்த விமானத்தில் தான் செல்ல முடியாது என்று விமான சேவை ஊழியர்களால் அறிவிக்கப்பட்ட தாகவும் கூறியுள்ளார்.

Victoria's Greens senator Lidia Thorpe accused of racially abusing her at Canberra airport, airline announces comprehensive inquiryVirgin ஆஸ்திரேலியா விமான சேவை ஊழியர்கள் தன்னை வேண்டுமென்றே புறக்கணித்ததாகவும், விக்டோரியாவில் Gunnai-Gunditjmara பூர்வகுடியில் இருந்து வரும் முதல் பெண் செனட்டர் தான் என்றும் Senator Thorpe கூறியுள்ளார். இதனை அடுத்து பொது வரிசையில் மற்ற பயணிகள் நின்று கொண்டிருந்த நிலையில் தானும் பொது வரிசைக்கு சென்றதாகவும், எப்படியாவது விமானத்தை பிடித்து விடலாம் என்ற நோக்கில் சென்ற போது தன்னிடம் இருந்த கைப்பை எடை அதிகமாக இருப்பதாக விமான சேவை ஊழியர்கள் கூறியதாகவும் Senator Thorpe தெரிவித்துள்ளார்.

IPad, செல்போன், வாட்டர் பாட்டில், லெதர் ஜாக்கெட் போன்றவை மட்டுமே இருந்ததாகவும் ஆனால் அவற்றை எடை அதிகமான பொருட்கள் என வேண்டுமென்றே நிராகரித்த நிலையில், அவற்றை வெளியில் எடுத்த பின்னரும் எடை கூடுதலாக உள்ளதாக ஊழியர்கள் கூறியதாக Senator Thorpe தெரிவித்துள்ளார்.

எடை கூடுதலாக இருப்பதால் எந்த பொருட்களையாவது இங்கேயே விட்டு செல்ல வேண்டும் என்று விமானசேவை ஊழியர் கூறியதாகவும் அதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் அவர் பாதுகாவலரை அழைத்ததாகவும் Senator Thorpe கூறியுள்ளார்.

இதுவரை தன்னுடைய விமான பயண அனுபவத்தில் இது போன்று பாதுகாவலரை அழைத்தது இல்லை என்றும் பாதுகாவலர் வரும்போதுதான் தன்னுடைய பைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து நடந்து சென்று விட்டதாகவும் Senator Thorpe கூறியுள்ளார்.

அந்த நாளில் தான் குறிப்பிட்ட விமானத்தில் பயணம் செய்து வர முடியாமல் போனதாகவும் இது திட்டமிட்டு தனது இனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்றும் Senator Thorpe வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஆன்லைன் வாயிலாக தனது புகாரை பதிவு செய்துள்ள செனட்டர் Thrope, இதுகுறித்து Virgin ஆஸ்திரேலியா விமான சேவை நிறுவனம் உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டு இருப்பதாக கூறியுள்ளது.

Link Source: https://ab.co/3ixk3o9