Breaking News

முகக்கவசம் அணிவதை வலுவாக வலியுறுத்தும் விக்டோரியா அரசு..!!

தொடர்ந்து கொரோனா தொற்றுக்கள் அதிகரித்து வருவதால், மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவதை விக்டோரியா அரசு வலுவாக வலியுறுத்தி உள்ளது.

Victorian government strongly insists on wearing face masks.

\விக்டோரியா மாநிலத்தில் கடந்த மாதத்தை விட தற்போது 53 சதவீதம் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால் பொதுப் போக்குவரத்து, வாடகைக் கார் பயணம், மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றுக்கு முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும் முதல்வர் பெரோட்டின் உத்தரவுப் படி, பொது இடங்களுக்குச் செல்லும் மக்களுக்கு சமூக இடைவெளி மற்றும் முகக் கவசம் அணிவது தொடர்பான அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் ஆஸ்திரேலிய சுகாதார பாதுகாப்பு முதன்மைக் குழு, மாநில அரசுகள் நோய் எதிர்ப்பு காலத்தை 28 நாட்களில் இருந்து 12 வாரங்களாக அதிகரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

Victorian government strongly insists on wearing face masks..!!சுகாதாரத்துறை முதன்மை அதிகாரி பென் கோவி, விக்டோரிய பள்ளிகள், குழந்தை பராமரிப்பு மையங்கள் மற்றும் விற்பனையகங்களில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் அதற்கு மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மேரி ஆன் தாமஸ் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அமைச்சர் மேரி ஆன் தாமஸ், தற்போதைக்கு விக்டோரியா மாநிலத்தில் முகக்கவசம் உட்புற இடங்களில் அணிய வேண்டும் என்கிற உத்தரவு நடைமுறையில் உள்ளது. ஆனால் பொதுவெளியில் முகக்கவசம் அணியாலாமா என்பதை விக்டோரியா மக்கள் தரும் முடிவெடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதேசமயத்தில் நிறுவனங்கள் மீண்டும் தங்களுடைய ஊழியர்களை வீட்டில் இருந்து பணி செய்ய அனுமதிக்க வேண்டும் அல்லது சுழற்சி முறையில் பணியாளர்களை அலுவலகங்களுக்கு வர அனுமதிக்க வேண்டும் என்றும் அமைச்சர் மேரி ஆன் தாமஸ் தெரிவித்துள்ளார்.