Breaking News

மெல்போரினில் ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் பொதுமக்கள் பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று விக்டோரிய முதல்வர் ஜேம்ஸ் மெர்லினோ வலியுறுத்திள்ளார்.

Victorian Chief Minister James Merlino has insisted that the public wear a helmet in public places even if the curfew is relaxed in Melbourne.

விக்டோரியா மாகாணத்தில் பரவிய கொரோனா தொற்றால், கடந்த மே 26 ஆம் தேதி ஊரடங்கு அமல்படுத்தபட்டது. தொற்று பரவலை கட்டுப்படுத்த்தும் நடவடிக்கையுடன், தொடர்பறிதலையும் விக்டோரிய அரசு துரிதப்படுத்தியுள்ளது.

புதன்கிழமை விக்டோரியா மாகாணத்தில் 23,679 நபர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Victorian Chief Minister James Merlino has insisted that the public wear a helmet in public places even if the curfew is relaxed in Melbourneஅதில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீர் தேக்கம் அமைந்துள்ள பகுதியில் வசித்தவர்களுக்கு எப்படி கொரோனா வந்தது என்பது தெரியாததால், அவர்கள் சென்ற இடங்களில் கொரோனா தொற்றாளர்கள் வந்து சென்றார்களா என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

இது குறித்து கருத்து தெரிவித்த சுகாதாரத்துறை துணை அதிகாரி அலென் செங், முகக்கவசம் அணிவது மூலம் தொற்று பரவலை கணிசமாக குறைக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.

விக்டோரியாவில் இருந்து தனித்து நிற்கும் மெல்போர்னை இயல்பு நிலைக்கு திருப்ப அனைவரும் முகக்கவசம் அணிந்து தொற்று பரவலை கட்டுப்படுத்த வேண்டும் என்று முதல்வர் மெர்லினோ கேட்டுக்கொண்டுள்ளார்.

அதே நேரம் வரும் வாரம், தொற்று பரவல் எவ்வாறு உள்ளது என்பதை உற்று நோக்க வேண்டி இருப்பதாகவும், எந்த விதமான தொடர்பும் இல்லாத 4 பேருக்கு தொற்று பரவியுள்ளதை கவனமாக அணுக வேண்டும் என்றும் அலென் யங் தெரிவித்துள்ளார்.

Victorian Chief Minister James Merlino has insisted that the public wear a helmet in public places even if the curfew is relaxed in Melbourne,.
தொற்று பாதித்தவர்கள் வந்து சென்ற இடங்கள் குறித்து அரசால் அறிவிக்கப்பட்ட இடங்களுக்கு வந்து சென்றவர்கள் அறிகுறிகள் இல்லாவிட்டாலும் பரிசோதனை செய்துக்கொள்ள முன்வர வேண்டும் என்று சுகாதாரத்துறை கேட்டுகொண்டுள்ளது. விக்டோரியாவின் வெர்மாண்ட், பாஸ்கோ வேலே போன்ற பகுதிகளில் கழிவு நீரை ஆய்வுக்கு உட்படுத்தியதில், அதில் கொரோனா வைரஸ் எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் தொற்று பரவல் ஏற்பட்டுள்ளதா என்றும் சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

Link Source: https://ab.co/3wiSO63