Breaking News

ஜூன் மாதம் மீண்டும் பணிகளை தொடங்குவேன் என்று விக்டோரியா மாநில முதல்வர் David Andrews நம்பிக்கை தெரிவித்துள்ளார்..

Victorian Chief Minister David Andrews has expressed confidence that work will resume in June

‌கடந்த மார்ச் 9 ஆம் தேதி மார்னிங்டன் பெனின்சுலார் விடுதியில் தங்கியிருந்த முதல்வர் டேவிட் படியில் தவறி விழுந்ததில் முதுகு தண்டுவடத்திலும், விலா எலும்பிலும் லேசான முறிவு ஏற்பட்டது.

காயமடைந்த பிறகு மருத்துவ விடுப்பில் சென்ற முதல்வர் டேவிட், அவரின் பொறுப்புகளை துணை முதல்வர் James Merlino கவனித்து வந்தார்.

Victorian Chief Minister David Andrews has expressed confidence that work will resume in June 1இந்நிலையில் இந்தாண்டுக்கான பட்ஜெட் வரும் மே மாதம் தாக்கல் செய்யப்படவுள்ளது.
பட்ஜெட் தாக்கலின் போதும் முதல்வர் டேவிட் மருத்துவ விடுப்பில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த விக்டோரிய மாநில முதல்வர் David, தனக்கு கொடுக்கப்பட்டு வரும் சிறந்த சிகிச்சையின் பலனாக உடல் நிலை தேறி வருவதாக தெரிவித்துள்ளார்.

மருத்துவர்களின் ஆலோசனையின் படி ஜூன் மாதம் தன்னுடைய பொறுப்புகளை ஏற்பேன் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் தன்னிடம் காட்டிய அன்புக்கு நன்றி தெரிவித்துள்ளார்.