Breaking News

ஆஸ்திரேலியாவிற்கு வரக்கூடிய வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும் என்று விக்டோரிய மாகாண முதல்வர் டேனியல் ஆண்ட்ரூஸ் வலியுறுத்தியுள்ளார்.

Victorian Chief Minister Daniel Andrews has insisted that the number of foreign travelers coming to Australia be curtailed.

இன்று நடைபெற உள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு முன்னதாக இந்தக் கருத்தை அவர் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் முன்பு கொரோனா பரவத் தொடங்கிய பிறகு மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கையின் காரணமாக தொற்றுப்பரவல் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டது.

கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 24,726 கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது அவர்களில் யாருக்கும் தொற்று கண்டறியப்படவில்லை என்பது சுகாதார பணியாளர்கள் இடையே நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கும் வருங்காலத்தில் முழு ஊரடங்கு அமல் படுத்துவது தவிர்ப்பதற்கும் வெளிநாட்டில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று விக்டோரியா மாகாண முதல்வர் டேனியல் தெரிவித்துள்ளர்.

.Victorian Chief Minister Daniel Andrews has insisted that the number of foreign travelers coming to Australia be curtailedஇது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள டேனியல், அத்தியாவசியமில்லாத வெளிநாட்டு பயணிகளின் வருகையை கட்டுப்படுத்துவது அவசியம் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் வெளிநாட்டு பயணிகளை விடுதிகளில் தனிமை படுத்துவதற்கு பதில், கூடுதல் பாதுகாப்புடன் மாற்று ஏற்பாடு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இதன் மூலமாக தேசம் பாதுகாப்பாக இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்காக மத்திய அமைச்சரவை கூட்டத்தில் தன்னுடைய கருத்தை எடுத்து வைப்பதற்கு தான் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஒரு சிலரை தனிமை படுத்துவதன் மூலமாக நாட்டு மக்கள் அனைவரையும் தனிமைப்படுத்தப்படுவது தவிர்க்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ள்ளார்.

Victorian Chief Minister Daniel Andrews has insisted that the number of foreign travelers coming to Australia be curtailed,.கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 19 ஆயிரம் பேருக்கு ஒரு தடுப்பூசி என்பது செலுத்தப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்தப்படும் எண்ணிக்கை அதிகரிக்கும்போது தளர்வுகளை நீட்டிப்பது குறித்தும் பரிசீலிக்கலாம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும் கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்தும் புதிய இலக்கை நிர்ணயிப்பது குறித்து இன்றைய அமைச்சரவையில் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் ஆலோசனை மேற்கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Link Source: https://ab.co/2SGz79I