Breaking News

விக்டோரியா மாகாணத்தில் தொழிலாளர் கட்சி எம்.பி மீதாக ஊழல் குற்றச்சாட்டை தனி நபர் ஆணையம் விசாரிக்கக் கோரிக்கை : பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு மூலம் ஊழலுக்கு எதிரான ஆணையத்திற்கு பரிந்துரை செய்ய ஒருமித்த முடிவு

Victoria. Private commission to probe corruption allegations against Labor MP in Victoria

2014ம் ஆண்டு தேர்தல் பரப்புரைக்காக செய்யப்பட்ட செலவு மூலமாக எம்.பி ADEM SOMYUREK சுமார் 3 லட்சத்து 88 ஆயிரம் டாலர் தொகை முறைகேடு செய்ததாகவும், இது தொடர்பாக தனிநபர் ஒருவர் 2018ம் ஆண்டு எழுப்பிய புகார் குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்று ஏற்கனவே பல்வேறு கோரிக்கைகள் விடுக்கப்பட்ட நிலையில், தற்போது அந்த விவகாரம் பாராளுமன்றம் வரை எதிரொலித்துள்ளது.

Victoria. Private commission to probe corruption allegations against Labor MP in Victoria.சிவப்பு சட்டை ஊழல் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த பிரச்சனை குறித்து ஊழலுக்கு எதிரான ஆணையமான IBAC விசாரணை நடத்த உத்தரவிடுவது தொடர்பான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் நடைபெற்றது. 2018ம் ஆண்டு பாராளுமன்றத்தால் நியமிக்கப்பட்ட விசாரணை அலுவலர் DEBORAH GLASS தெரிவித்த தகவலின் அடிப்படையில் பொதுமக்களின் நிதி பெருமளவு கையாடல் செய்யப்பட்டு உள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாராளுமன்றத்தில் தனி நபர் விசாரணை ஆணையம் மற்றும் ஊழலுக்கு எதிரான ஆணையமான IBAC விசாரணை நடத்துவதற்காக மேற்கொள்ளப்பட்ட வாக்கெடுப்பில் 19 க்கு 17 வாக்குகள் பெறப்பட்டுள்ளது. மேலும் CROSSBENCHER மற்றும் எம்.பி கௌசல்யா வகேலா ஆகியோரின் வாக்குகளின் அடிப்படையில் விசாரணைக்கு உத்தரவிட ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

Victoria. Private commission to probe corruption allegations against Labor MP in Victoria,அப்போதைய நிலையில் கட்சி தரப்பில் பணம் திரும்ப கொடுக்கப்பட்டதால் காவல்துறை வழக்குப்பதிவு செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. மேலும், இந்த வாக்கெடுப்பில் கௌசல்யா வகேலா எம்.பி க்கு எதிராக வாக்களித்துள்ள நிலையில் இது தொடர்பாக கட்சியின் உயர்மட்டக் குழு கூடி ஆலோசிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் எதிர்வரும் தேர்தலில் அவர் கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படுமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.

மேலும் வாக்கெடுப்பின் போது பாராளுமன்றத்தில் பேசிய கௌசல்யா வகேலா, மேற்கண்ட ஆணையங்கள் நேர்மையான முறையில் விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். தொழிலாளர் கட்சியின் எம்பி மீதான குற்றச்சாட்டுக்கு அதே கட்சியை சேர்ந்த எம்.பி வாக்களித்தது மட்டுமின்றி அவர் பாராளுமன்றத்தில் பேசிய விவகாரம் அக்கட்சி எம்பி.க்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. மேலும், இதன் காரணமாக கட்சி விதிகளை மீறியதால் அவர் கட்சியில் இருந்து நீக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அரசுத் தரப்பில் விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் அதனை உரிய முறையில் கண்காணித்து உண்மை நிலை வெளிக்கொண்டு வரப்படும் என்றும் அரசின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக அறிக்கை விரைவில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Link Source: https://ab.co/3rFzIqS